பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பதினெண் புராணங்கள் மாறினாள். அக்னியும் சுவாஹாவும் மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றனர். அக்னி வளர்க்கும் பொழுது, சுவாஹா என்ற சொல்லைச் சொல்லவில்லையெனில், அம்மந்திரம் விஷம் இல்லாத பாம்பு போலவும், கல்வி அறிவில்லாத மனிதனைப் போலவும், பழங்கள் இல்லாத மரம் போலவும் கருதப்படும். பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தியில் பித்ரி எனப்படும் முன்னோர்களை உருவாக்கினார். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யும் பொழுது அது அவர்களைச் சென்று சேரவில்லை. அவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மனும் ஸ்வதா என்ற தேவதையை உருவாக்கி, சிரார்த்த மந்திரங்கள் கூறும்பொழுது ஸ்வதா என்ற சொல்லையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு கூறினால் மட்டுமே முன்னோர்களுக்கு செய்யப்படும் படைப்புக்கள் அவர்களைச் சென்றடையும் என்றும் கூறினார். தட்சிணா என்பவள் யக்ஞ தேவனின் மனைவி ஆவாள். யாகம் நடத்துபவர்கள் அதற்குண்டான தட்சினையை உடனடியாக செய்விப்பவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த யாகத்தினால் ஏற்படும் பலன்கள் பயனற்றுப் போய்விடும். பிரகருதி தேவதையின் ஆறில் ஒரு பங்கு உடம்பினைப் பெற்ற சஷ்டி, கார்த்திகேயனின் மனைவி ஆவாள். தேவசேனா என்ற பெயருடன் வழங்கப்படும் இவள் பிரம்மாவின் இச்சா மாத்திர சக்தியினின்று வந்தவள். குழந்தைகளுக்கு தெய்வமாக விளங்குபவள். சுயம்பு மனுவின் மகனாகிய பிரியவரதா, பெரிய யாகம் செய்து ஒரு மகனைப் பெற்றான். இறந்தே பிறந்த அக்குழந்தையை எரித்துவிட்டு, தானும் உயிர் விட நினைத்தான். சஷ்டி தேவதை அக்குழந்தைக்கு உயிர்