பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 பதினெண் புராணங்கள் ஜரதகருவிற்கும், மனசாவிற்கும் மகனாகத் தோன்றியவன் பெரியவனாக வளர்ந்த பின் சிவனை வேண்டி நீண்ட காலம் தவம் செய்தான். மனசாவும், காசிப முனிவரின் ஆசிரமம் சென்று தங்கி இருந்தாள். பரிட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பினால் கடிக்கப் பட்டு மாண்டான். இதனால் கோபம் கொண்ட அவன் மகன் ஜனமேஜெயன், பாம்புகளை பலியிட்டு யாகம் செய்தான். இதனால் கலக்கமுற்ற தட்சகன் இந்திரனிடம் சென்று காப்பாற்றும்படி கேட்க, இந்திரன் மனசாவிடம் வேண்டிக் கொண்டான். தன் மகன் அஸ்திகாவிடம் கூறி தட்சகனைக் காப்பாற்றும்படிக் கூறினான். இதற்கு நன்றி தெரிவித்த இந்திரன், மனசாவை மந்தாகினி நதியில் குளிப்பாட்டி, நவரத்தினங்கள் பதித்த அரியணையில் அமரச் செய்தான். மனசாவைத் துதிப்பவர்கள், நாகங்களுக்கு பயப்படத் தேவையில்லை. பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணன், திடீரென்று பாலை அருந்த வேண்டும் என்று நினைத்து, தன் இடப்பக்கத்தினின்று சுரபி என்னும் பசுவினைப் படைத்தான். அப்பசுவினின்று பாலைக் கறந்து, அப்பாலைக் குடித்தான் கிருஷ்ணன். அப்பாத்திரத்தில் மீதமிருந்த பால் ஒர் ஆற்றின் அளவு அதிகமாகிப் பெருகியது. சரோவரா என்ற பெயருடைய பாலாறாக ஒடியது. சுரபியின் மயிர்க்கால்களில் இருந்து காமதேனு பசுக்கள் உண்டாயின. வராக கல்பத்தில், விஷ்ணு மூவுலகத்திலும் பால் இல்லாமல் போகவே, இந்திரன் சுரபியை வேண்டிப் பாலினைப் பெற்றான். கார்த்திகை மாதத்தில் தீபாவளியை அடுத்த நாள் சுரபி என்னும் பசுவைத் தொழுது வணங்குவதற்குச் சிறந்த நாள்.