பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 449 சபதம் முடிந்தபின்பு, சிவபெருமானைக் காணச் சென்றான். வாயிலில் நின்றிருந்த கணேசன், சிவனும், பார்வதியும் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதால், அவர்களை இப்பொழுது பார்க்க இயலாது என்றும் கூறினார். பொறுமை இல்லாத பரசுராமன் கணேசனைப் பார்த்து, "நான் இப்பொழுது உள்ளே செல்லப் போகிறேன். நீ குழந்தை. உன்னால் முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்” என்று கூறிக் கணேசனைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றான். கோபம் கொண்ட கணேசன் தன் தும்பிக்கையை நீட்டி பரசுராமனைத் துக்கிக் கடலில் எறிந்து, பின் மீண்டும் அவரை எடுத்து, பூமியில் தூக்கி எறிந்தார். பரசுராமன் சிவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரசு என்னும் ஆயுதத்தை எடுத்து கணேசனை நோக்கி வீச அவ்வாயுதம் கணேசனின் ஒரு கொம்பினை உடைத்தது. நடந்த கதைகளை அறிந்த சிவனும், பார்வதியும் கணேசனை அருகில் அழைத்து, பரசுராமனைப் பார்த்து பார்வதி தேவி பின்வருமாறு கூறினார்: “பரசுராமா! உன்னைப் போல் பல பரசுராமன்களை அழிக்க இவனால் முடியும். ஆனால் தன்னை மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கணேசன் ஒரு சிறு பூச்சிக்குக் கூட துன்பம் செய்யமாட்டான்' என்று கூறினார். பரசுராமனும் கணேசனை மலர்களால் தொழுது வணங்கினார். கணேசனுக்குத் துளசியைப் போட்டு வணங்குதல் கூடாது என்று கூறிய நாராயண முனிவர் அதற்கான காரணத்தையும் நாரதருக்கு விளக்கினார். ஒருநாள் கங்கைக் கரையினில் கணேசன் தவம் செய்து வந்தார். அங்கு வந்த துளசி, கணேசனைப் பார்த்து விருப்பம் கொண்டு தான் தர்மதுவஜா அரசனின் மகள் என்றும், தன்னைக் கணேசன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ւււբ-29