பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/479

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


450 பதினெண் புராணங்கள் என்றும் வற்புறுத்தினாள். கணேசனும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அற்றதாகவே இருக்கிறது என்பதால் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். கோபம் கொண்ட துளசி, 'கணேசன் பிரம்மசாரியாக இருக்க முடியாது என்று சாபமிட்டாள். கணேசனும், துளசியை ‘ஒரு அரக்கனிடம் சிக்கிப் பிறகு செடியாக இருப்பாய் என்று சாபமிட்டார். துளசி அவரிடம் மன்னிக்கும்படி கேட்க, கணேசனும் மனமிரங்கி, எல்லா மலர்களிலும் துளசி சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெறும் என்றும், விஷ்ணுவுக்கு மிக உகந்த மலராகும் என்றும் கூறி, தனக்குத் துளசியை யாரும் படைக்கக் கூடாது என்றும் கூறிவிட்டார். கிருஷ்ணன், ராதை பிரம்ம வைவர்த்த புராணத்தின் இறுதிப் பகுதி கிருஷ்ண ஜென்ம காண்டம் என்ற பெயருடன் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம், லீலைகள் பற்றிக் கூறுகிறது. இதற்கெனவே இவை பற்றி விஷ்ணுபுர7ணத்திலும், பிரம்ம புர7ணத்திலும் கூறப் பட்டிருப்பதால், அங்கு கூறப்படாத பகுதிகள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன, கோலோகாவில் பூரீதமாவினால் (மகளாகப் பிறப்பாய் என) சபிக்கப்பட்ட ராதை, கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க நேரிடுமே என நினைத்து வருந்தினாள். அச்சமயம் பூமியில் கொடியவர்கள் பெருகி, அவர்கள் தரும் தொல்லையில் உலகம் சிக்கித் தவிக்கிறது. ராதை கிருஷ்ணனிடம், பூவுலகில் அவன் பிறந்து, இக்கொடுமையினின்று மக்களைக் காக்க வேண்டும் என்று வேண்ட, கிருஷ்ணனும் அதனை ஒப்புக் கொண்டான். ராதையும், மற்றும் கோபியர்களும் கிருஷ்ணனைப் போலவே இப்பூவுலகில் பிறப்பெடுத்தனர். கோகுலத்தில் விராஜ மன்னன் மகளாகத் தோன்றினாள் ராதை.