பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 19 ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான். அவ்வப் பணியைச் செய்யும்பொழுது அதற்குரிய பெயரினைப் பெறுகிறான். உதாரணமாக, விஷ்ணு என்ற பெயரில் தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். இந்திரன் என்ற பெயரில் அசுரர்களை அழிக்கிறான். தத்தா என்ற பெயரில் உயிர்களைப் படைக்கிறான். வருணன் என்ற பெயரில் நீரில் இருக்கிறான். சித்திரை முதல் பங்குனி முடிய வுள்ள மாதங்களில் பருவங்களுக்கேற்ற முறையில் பல்வேறு மாறுபாடுகளைச் செய்தலின் பன்னிரண்டு சூரியர்கள் எனப்பட்டார்கள். உலகின் வாழ்விற்கு மூலமாக இருப்பவன் சூரியன் ஆதலால் பன்னிரண்டு சூரியர்கள் என்று சொல்லப் பட்டதோடல்லாமல் 12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன. அவை ஆதித்யா, சூர்யா, அருக்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன், ரவி முதலியவையாம். இவற்றை அல்லாமல் நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறியதாக பிரம்ம புராணம் கூறுகிறது. - பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய கதை சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும், இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்றவனாவான். வெறும் உடல் வன்மையோடு மட்டுமல்லாமல் வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். போர்க் கருவிகள் அனைத்தையும் கையாளும் பேராற்றல் பெற்றிருந்தான். சுருங்கச் சொன்னால் அவனுக்கு நிகரானவர் பூவுலகிலோ