பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/480

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம வைவர்த்த புராணம் 451 இதை அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வசுதேவர் தேவகி கதை கிருஷ்ணன் பிறப்பு ஆதனை என்னும் அரக்கியின் கதை ஆகியவை முன்பே கொடுக்கப்பட்டுள்ளன, நலகுபரன் கதை ஒருநாள் யசோதை குளித்துவிட்டு வரும் பொழுது, தன் வீட்டில் வைத்திருந்த பால், தயிர் அனைத்தும் தீர்ந்து போயிருந்ததையும், வெண்ணெய் வைத்திருந்த மட்பாண்டம் உடைந்து போயிருந்ததையும் கண்டாள். ஒவ்வொரு நாளும் இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. கோபம் கொண்ட யசோதை இதைச் செய்வது யார் எனக் கண்டுபிடித்து, தண்டனை தர விரும்பினாள். முடிவில் கிருஷ்ணனே இதைச் செய்திருப்பத்ை அறிந்து அவனைப் பிடிக்க முயன்றாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பிடியில் அகப்படாத கிருஷ்ணன், தன் தாய் யசோதையைக் கண்டு மனமிரங்கித் தானே வலிய வந்து அவளிடம் மாட்டிக்கொண்டான். யசோதை கிருஷ்ணனை நையப் புடைத்து, ஒரு துணியினால் அவனை மரத்துடன் சேர்த்துக் கட்டி விட்டு, தன் வேலை களைக் கவனிக்கச் சென்றாள். அந்த மிக உயரமான அருச்சுனா மரம், கிருஷ்ணன் தொட்டவுடன் பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டு கீழே விழுந்தது. அதிலிருந்து ஆபரணங்கள் அணிந்த அழகிய உருவம் வெளிவந்து கிருஷ்ணனை வணங்கி நின்றது. தேவல முனிவரை மதியாமல், அவமானப்படுத்தியதால் அவரிட்ட சாபத்தால் மரமாகி நின்றவன் நலகுபரன் என்பவன். இவன் குபேரனின் மகனாவான். முனிவர் கூறியபடி கிருஷ்ணனால் சாப விமோசனம் பெற்று, குபேரன் இருக்கும் இடம் சென்றான். இதை அடுத்து கிருஷ்ணனின் விலைகளில் இடம்பெறும் காளிங்கன் என்னும் பாம்பின் கதை கோவர்த்தனமலை,