பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 பதினெண் புராணங்கள் தேனுகாசரன் கதை முதலியவை முன்பே கொடுக்கப் z /:6X;za77637,) துர்வாசர் கதை நாராயண முனிவர், நாரதரிடம் துர்வாச முனிவர் கதையைக் கூற ஆரம்பித்தார்: கந்தமாதனம் என்னும் மலையில் துர்வாசர் தியானம் செய்து கொண்டிருந்தார். வலிச்சக்கரவர்த்தியின் மகனாகிய சகசிகா, அப்சரஸ் திலோத்தமை ஆகியோரால் தவம் கலைந்த துர்வாசர் அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டு, தன் தவத்தையும் அத்துடன் விட்டுவிட்டு அங்குமிங்கும் உலவி வந்தார். அச்சமயம் ஒளர்வ முனிவரின் மகளாகிய கந்தலி என்பவளைக் கண்டு மணம் புரிந்து கொள்ள விரும்பினார். ஒளர்வ முனிவரும், துர்வாசரிடம் தன் மகள் மிகவும் சண்டை போடும் குணமுடையவள் என்றும், மனம் வருந்தும் படியான சொற்களைக் கூறுபவள் என்றும் கூறினார். துர்வாசரும், அவள் கூறும் நூறு கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்வதாகவும், அதற்கு மேல் கூறினால் அதற்குண்டான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறினார். துர்வாசரும், ஒளர்வ முனிவரும் கந்தலிக்குப் பல புத்திமதிகள் கூறியும், அவள் எதனையும் சட்டை செய்ய வில்லை. ஒருநாள், கந்தலியும் நூறு கடுஞ்சொற்கள் கூறி அதை துர்வாசரும் மன்னித்த பிறகு, மீண்டும் கடுமையான சொற்கள் கூறத் துவங்கினாள் கந்தலி. இதனால் கடும்கோபம் கொண்ட துர்வாசர், கரியாகும் வரை எரிய வேண்டும் எனச் சாபமிட்டார். மனைவியை இழந்த துர்வாசர் மனக்கலக்க முற்றார். சிறிய பையனாகத் தோன்றிக் கிருஷ்ணன் அவரைத்