பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பதினெண் புராணங்கள் விட்டு எழுந்திருக்காமலும், குருவுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தைச் செய்யாமலும் இருந்துவிட்டான். அவனுடைய அகங்காரத்தை அடக்கக் கருதிய பிரகஸ்பதி, உன் பதவி முதலியவற்றை இழந்து அனைத்துச் செல்வங்களையும் இழந்து உழல்வாயாக என்ற சாபத்தைத் தந்தார். சாபமிடப்பட்டவுடன் இந்திரன் தலைநகராகிய அமராவதி தன் அழகை இழந்தது. அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழலாயின. இந்தப் பரிதாபமான காட்சியைப் பார்த்த இந்திரன் தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்து இழந்தவற்றைப் புதுப்பித்து மறுபடியும் அமராவதியைப் பழைய நிலைக்குக் கொண்டு வருமாறு ஆணையிட்டான். விஸ்வகர்மா எவ்வளவு முயன்று புதுப்பித்தாலும் இந்திரன் விஸ்வகர்மாவின் வேலையில் குறைசொல்லிக் கொண்டே வந்தான். எப்படிச் செய்தாலும் இந்திரன் திருப்தி அடைவதாக இல்லை. இந்திரனை விட்டு விட்டுப் போய்விட வேண்டும் என்று விஸ்வகர்மா பலமுறை முயன்றும் இந்திரன் அவனை விடுவதாயில்லை. இறுதியாக மனம் நொந்துபோன விஸ்வகர்மா பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மா விஸ்வகர்மாவை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஸ்வகர்மா நடந்தவை அனைத்தையும் சொல்லித் தனக்கு விடுதலை தருமாறு விஷ்ணுவிடம் வேண்டினான். இவற்றையெல்லாம் கேட்டறிந்த விஷ்ணு ஒரு பிராமணச் சிறுவன் வடிவம் கொண்டு, இந்திரனிடம், ஒ இந்திரனே! எத்தனையோ அமராவதிகளையும், இந்திரர் களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னுடைய இந்த அமராவதி போல அழகான ஒரு நகரத்தையும், உன்னைப் போன்ற ஒரு இந்திரனையும் பார்த்ததே இல்லை!" என்று சிறுவன் கூறினான். சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திரன், மிகவும் ஏளனமாக “பிராமணச்