பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 457 சிறுவனே! நீயோ சிறுவன். எத்தனையோ இந்திரர்களையும் அமராவதிகளையும் பார்த்திருக்கிறேன் என்றும் சொன்னாயே. அப்படி எத்தனை இந்திரர்களைப் பார்த்தாய்?" என்று கேட்டான். சிறுவன் சிரித்துக் கொண்டே இந்திரனே, இந்தச் சிறிய பூமிக்கு மேல் உள்ள தேவலோகத்தில் நீ இந்திரன். ஆனால் இந்தப் பெரிய அண்டத்தில் இதுபோன்ற எத்தனையோ தேவலோகங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவலோகத்திலும் ஓர் அமராவதியும், ஒர் இந்திரனும் உள்ளனர். இந்த இந்திரர்களைக் கணக்கெடுத்தால் சமுத்திரத்தில் உள்ள மணலினும் பலராவர். உன்னுடைய விஸ்வகர்மா படைத்த இந்த அமராவதி அந்த அமராவதி களைவிடச் சிறியதாயினும் மிக்க அழகுடன் விளங்குகிறது. இதனைச் சபித்த விஸ்வகர்மா மதிக்கப்பட வேண்டியவன்' என்று சிறுவன் கூறியவுடன் வியப்புத் தாங்காத இந்திரன், 'சிறுவனே, எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்? என்றான். அப்பொழுது சிறுவனின் பாதத்தின் பக்கத்தில் எறும்புகள் சாரைசாரையாகப் போய்க்கொண்டிருந்தன. சிறுவன், இந்திரனே! இந்த எறும்புகளைப் பார். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே ஆவர். ஒர் இந்திரனுடைய பதவிக் காலம் எழுபத்தியோரு யுகங்களாகும். இத்தனை யுகங்கள் வாழுகின்ற ஒர் இந்திரனைப் போல இருபத்தி எட்டு இந்திரர்கள் தோன்றி மறைகின்ற அந்த நீண்ட காலம் பிரம்மனுடைய ஒருநாள் ஆகும்.' சிறுவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன், அண்டத்தின் அமைப்பில் தானும், தனது இந்திரப் பதமும் மலையளவு பெரியது என்று நினைத்திருந்த இந்திரன், கடுகைவிடச் சிறிய அற்பமான ஒருவன் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான். உடனே விஸ்வகர்மாவை