பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 பதினெண் புராணங்கள் அழைத்து அவன் போகலாம் என உத்தரவு கொடுத்து விட்டான். அக்னியின் கர்வபங்கம் ஒருமுறை அஷ்டதிக்குப் பாலர்களில் ஒருவனாகிய அக்னி ஏதோ காரணத்தால் சினம் கொண்டு மூன்று உலகத்தையும் எரித்துச் சாம்பலாக்குகிறேன் என்று சூளுரைத்து, பனை மரத்தை விட உயரமாகத் தன்னுடைய சுடர்களை நீட்டி அனைத்தையும் எரிக்கப் பார்த்தான். அப்பொழுது ஒரு குழந்தை வடிவாக அங்கே வந்த விஷ்ணு, ஒரு சிறிய துரும்பை எடுத்து அக்னிதேவனின் முன்னர் போட்டு, எங்கே இதை எரி பார்க்கலாம் என்றார். சினம் கொண்ட அக்னி அக் குழந்தையையும், துரும்பையும் ஒரே சமயத்தில் எரிக்க முயன்றான். குழந்தையின் தலையில் உள்ள ஒரு முடியைக் கூட அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிரே இருந்த துரும்பையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்வம் அடங்கிய அக்னி தலையைத் தாழ்த்திக் கொண்டான். இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணம் பார்வதி சந்திரன், சூரியன், துர்வாசர் முதலி பலருடைய கர்வ பங்கங்களை வரிசைப்படுத்திச் சொல்விக் கொண்டே போகிறது. அடுத்து இராமாயணத்தையும், கம்வைதத்தையும் பேசுகிறது ராதையும், கிருஷ்ணனும் சேர்ந்த கதை பிரிதமாவின் சாபத்தால் கிருஷ்ணனைப் பிரிந்து ஒர் இடையர் குலப் பெண்ணாக வாழ்ந்து வந்த ராதை, சித்தாஸ்ரமம் சென்று வழக்கம் போல் கணேசனை வழிபடச் சென்றாள். அங்கு சென்ற பொழுது பார்வதி அங்கே தோன்றி. ராதை, நீ கிருஷ்ணனுடன் சேரும் காலம் நெருங்கிவிட்டது.