பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 459 விரைவில் அவனை அடைவாய்!” என்று கூறி மறைந்தார். இதனைக் கேட்ட ராதை தான் முன்பு பழகிய கோகுலத்திற்குச் சென்றாள். இப்பொழுது கிருஷ்ணன் கரிய நிறமுடையவனாக மஞ்சள் பட்டை அணிந்து, மயில் இறகைத் தலையில் அணிந்து, கையில் குழலுடன் ராதையை வந்து சந்தித்தான். கோபிகைகள் அனைவரும் ராதையையும், கிருஷ்ணனையும் வரவேற்றனர். அந்நேரம் கோலோக உலகினின்று பொன் விமானம் வர, நந்தகோபன், யசோதை, அனைத்து கோபிகைகள் ராதை, கிருஷ்ணன் ஆகிய அனைவரும் ஏறிக்கொள்ள அவ்விமானம் கோலோக உலகை அடைந்தது. அங்கு அனைவரையும் அமரச் செய்து கிருஷ்ணன் பின்வருமாறு பேசினான். 'பிரம்மாவில் தொடங்கி, அற்பப் புல்லின் இதழ்வரை அனைத்தும் மாயை ஆகும். ஆகாயத்தில் தோன்றும் மின்னலையும், ஒரு நீர்க்குமிழியையும், நீரில் இழிந்த கோட்டினையும் போன்றது மேலே சொல்லப்பட்டவை. கிருஷ்ணன் பிறந்ததில் இருந்து, கோலோகம் செல்லும்வரை இந்த பூமியில் அவன் வாழ்ந்த காலம் கோகுலத்தில் பதினேழு ஆண்டும், மதுரா, துவாரகா இரண்டிலும் நூறு ஆண்டுகள், பிருந்தாவனத்தில் பதினான்கு ஆண்டுகள் ஆக நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளே ஆகும். (கிருஷ்ணன் ராதையுடன் விமானம் ஏறிக் கோலோக உலகம் சென்றான் என்று கூறும் இதே பிரம்மவைவர்த்த புராணம் மற்றப் புராணங்களைப் போவ கிருஷ்ணன் வேடனால் கொல்லப்பட்டதாகவும், பலராமன் உடம்பில் இருந்து பெரிய பாம்பு வெளிப்பட்டு கடலுக்குள் சென்ற தாகவும் யாதவர்கள் அனைவரும் போரிட்டுக்கொண்டு மடிந்ததாகவும் கூறுகிறது. இந்த இரண்டுவகை கிருஷ்ணன் பற்றிய கதைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண் பட்டவையாய் இருக்கின்றன. பிரம்மவைவர்த்த புராணத்தின்