பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 பதினெண் புராணங்கள் தான்காவது காண்டமாகிய கிருஷ்ணஜன்ம காண்டத்திலேயே அடுத்தடுத்து முரண்பட்ட கதைகள் பேசப்பட்டுள்ளன. இப் புராணத்தைப் பொறுத்தமட்டில் குழப்பங்கள் நிரம்ப உள்ளன என்பது அறியப்பட வேண்டும், நாராயண முனிவரிடம் இப்புராணத்தைக் கேட்ட நாரதர் “இதுவரை எங்கும் நான் கேட்டிராத பல அரிய விஷயங் களைச் சொல்லி என்னைத் தெளிவுபடுத்தி விட்டீர்கள். இனி யான், யாரிடமும் சென்று எதையும் கேட்கத் தேவையில்லை. நான் முழுத்திருப்தி அடைந்து விட்டேன். அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? நேரடியாக இமயமலை சென்று தவத்தில் ஈடுபடட்டுமா?’ என்று கேட்டார். நாராயண முனிவர் "இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. போன ஜென்மத்தில் உனக்கிருந்த ஐம்பது மனைவியருள் ஒருத்தி, எத்தனை பிறப்பெடுத்தாலும் உன்னையே கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பி இப்பொழுது சிரிஞ்செய அரசனின் மகளாகப் பிறந்துள்ளார்கள். அவளை மணம் புரிந்து கொண்டு வாழ்வாயாக’ என்று சொல்ல, நாரதரும் அவ்வாறே செய்தார். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட நாரதர் விஷ்ணுவை அடியோடு மறந்துவிட்டார். இல்வாழ்க்கையின் சுகபோகங் களிலேயே திளைத்துக் கொண்டிருந்த நாரதரை சனத்குமார முனிவர் மெள்ள அவர் மனைவியிடமிருந்து அவரைப் பிரித்து, விஷ்ணுவை தியானிக்கும் வழியில் செலுத்தினார். முடிவுரை எல்லாப் புராணங்களையும் போல இப்புராணமும், இதைக் கேட்போர் இன்னபயன் அடைவார்கள் என்பன போன்ற வழக்கமாகச் சொல்லப்படுகின்ற சொற்களுடன் முடிவடைகின்றது. o 日 口 口