பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - பதினெண் புராணங்கள் அன்றி தேவருலகிலோ இல்லை என்று கூறிவிடலாம். இவ்வளவு இருந்தும் கடுகளவும் அகங்காரம் கொள்ளாமல் விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான். தனக்குள்ள செல்வம், ஆற்றல், அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் பயன் படுத்த ஒரு வழியைக் கண்டான். தன்னால் வழிபடப்படும் விஷ்ணுவிற்கு அன்றுவரை யாரும் கட்டாத ஒரு சிறந்த கோயிலை அமைக்கத் தீர்மானித்தான். சிறந்த கோயிலாக அமைவதுடன், அக்கோயில் அமைகின்ற இடமும் ஈடு இணை யற்றதாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்ததில் வியப்பொன்றுமில்லை. எங்கும் பரவி இருந்த அவன் செல்வாக்கு காரணமாக எல்லாத் தீர்த்தங்களையும், இருமருங் கிலும் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களையும் பார்த்து அலசி ஆராய்ந்தான். அவனுடைய தலைநகரான அவந்தியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் மிக அற்புதமாக இருந்தன. பெரிய பெரிய விண்ணை இடிக்கும் கட்டடங்கள் நிறைந் திருந்தது அவந்தி. ஓயாத மக்கள் நடமாட்டமும், பெரு வாணிபம் நடைபெறுகின்ற கடைவீதிகளும் நிறைந்திருந்த அவந்தியில், விஷ்ணு கோயிலைக் கட்ட ஏனோ அவன் மனம் இடம் தரவில்லை. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், சிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மிகப் பிரசித்தமான மகாகாளர் திருக்கோயில் என்று வழங்கப்படும் ஒரு பெரிய சிவன் கோயிலும், கோவிந்த சாமி, விக்கிரம சாமி என்ற பெயர்களில் இரண் விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன. மகா காளர் கோயிலைப் பொறுத்தமட்டில் ஒரு தனிச் சிறப்பும் உண்டு. அவரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு என்றும் சொல்லப் பட்டது. இவ்வாறு இருந்தும் அரசனின் மனம் இங்கு லயிக்க வில்லை.