பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


462 பதினெண் புராணங்கள் மகாதேவியே மாபெரும் பெண் தெய்வமாவாள். பிரகிருதியே பிரபஞ்சத்தின் விதைகளைத் தாங்கி நிற்பவள் லிங்கபுராணம் 1-19-16) இப்புராணம் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டது. சிவ வழிபாட்டுக்காரர்களுக்கு இப்புராணம் ஒரு கையேடாகும். இப்புராணம் சிவமூர்த்தத்தை வழிபடுவதற்குரிய வழிகளைச் சொல்வதுடன் சிவனுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும். பிரபஞ்சங்களின் உற்பத்தி அழிவு மறுஉற்பத்தி ஆகிய நேரங்களில் சிவம் இந்த ஐந்து வடிவங்களில் தேவையானதை மேற்கொண்டு பிரம்மனுக்கு ஆணை யிட்டுப் படைப்பைத் தொடங்குமாறு ஏவுகிறது. இது விஷ்ணுவை, சிவனுக்குக் கீழ் பணிபுரிபவராகக் காட்டுகிறது. இன்று 11,000 பாடல்களுடன் காணப்படும் மூலமாக இருந்த பழைய லிங்க புராணம் இழக்கப்பட்டதை ஈடுசெய்யும் முறையில் அமைந்துள்ளதாகும். மூல புராணத்தில் காணப்படாத பல தாந்திரீக வித்தைகள் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன. பல நூல்களில் லிங்கபுராணத்தில் இருந்து இன்றுள்ள லிங்க புராணத்தில் காணப்படவில்லை. ஆதலால்தான் மூல லிங்க புராணம் இழக்கப்பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்ப இந்தப் புதிய லிங்க புராணம் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணங்களைப் படிக்கப் போகும் நாம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் வணங்கிவிட்டுத்தான் புராணங்களைப் படிக்க வேண்டும். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.