பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 463 அப்பொழுது சுதா ஜாதியைச் (சத்திரியத் தகப்பனுக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்) சேர்ந்த லோமஹர்ஷனர் அங்கே வந்தார். பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு உலகைச் சுற்றி வரும் நாரதரும் எதிர்பாராதவிதமாக அங்கே வந்தார். முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து, இப்புராணங்களை எல்லாம் இயற்றிய வேதவியாசரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் பாக்கியம் செய்தவர் நீங்கள். ஆகவே நாரதரும் இங்கிருக்கும் நேரத்தில் இலிங்க புராணத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்: பிரபஞ்சம் ஆதியில் பரப்பிரம்மம் ஒற்றையாக இருந்தது. எங்கும் எதுவும் இல்லை. அது தன்னைத்தானே மூன்றாகப் பிரித்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவெடுத்தது. இதை அடுத்து எங்கும் நிறைந்த நீர் அதில் தோன்றி முட்டை, பிரம்மன் படைப்பைத் துவங்குதல், காலப்பிரமாணம், யுகங்களின் அளவு ஆகியவை ஏனைய புராணங்களைப் போலவே இங்கும் உள்ளன. இதில் புதிதாகக் கண்டுள்ள செய்தி வருமாறு உற்பத்தி துவங்கு முன்னர் தனது வேலைப் பளு மிகுதியாக இருப்பதால் தனக்கு உதவி செய்யுமாறு பிரம்மன் சிவனை வேண்டிக் கொண்டார். சரி என்று ஒப்புக்கொண்ட சிவன் தன்னைப் போலவே பதினோரு பேரைப் படைத்தார். இவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்த பிரம்மன் அதிர்ச்சி அடைந்து, நிறுத்துங்கள், உம்மைப் போல அழிவில்லாத சிரஞ்சீவிகளைப் படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் கேட்டது அழிகின்ற உடம்போடு கூடிய ஜீவராசிகளே ஆகும்’ என்று பிரம்மா சொல்ல, சிவன் படைப்புத் தொழிலில்