பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 467 அதிர்வுகள் தோன்ற இருவரும் நின்ற நிலையில் ஆட்டம் கண்டனர். பிரம்மனுக்கு இது புதிய அனுபவம் ஆதலால், ஏன் இப்படிக் கொப்பூழை ஆட்டி எனக்குத் துன்பம் தருகிறாய் என்று விஷ்ணுவிடம் கேட்டார். உடனே விஷ்ணு ஆட்ட வில்லை. சிவபெருமான் வருகிறார் என்று தெரிகிறது. அவர் வருவதால் ஏற்படுகின்ற அலைஅலையான அதிர்வுகள் நம் இருவரையும் நிலைகொள்ளாமல் ஆட்டி வந்தது என்றார். இந்த அதிர்ச்சி தாங்காத பிரம்மா, சிவன் யார் எனக் கேட்க விஷ்ணு, நாம் இருவரும் சிவனைத் தியானம் செய்வோம் என்று கூறி தியானத்தில் ஈடுபட்டபோது, சிவன் அவர்கள் எதிரே தோன்றினார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று சிவன் கேட்க, விஷ்ணு தங்களிடத்தில் நீங்காத பக்தி வேண்டும் என்று விடை கூறினார். தந்தேன் என்று கூறிய சிவன், பிரம்மனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பிரம்மன் "தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். இவ்வரத் தைக் கேட்டுக் கொண்ட சிவனும், அவ்வாறே ஆகுக' என ஒப்புக்கொண்டார். பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கியவுடன், அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் அவன் விரும்பியபடி இல்லை. படைப்பு தன் விருப்பப்படி இல்லை என்பதை அறிந்த வுடன் பிரம்மனுக்கு எல்லையில்லாத துயரம் உண்டாயிற்று. அத்துயரத்தின் வெளிப்பாடே ருத்திரன் ஆவான். தேவதாரு : தேவதாரு மரம் என்பது மரங்களில் சிறப்பான ஒன்று. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் தேவதாரு மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அக்காட்டில் முனிவர்கள் பலர் தத்தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வந்தனர். இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான்,