பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/497

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


458 பதினெண் புராணங்கள் அம்முனிவர்களைப் பரீட்சை செய்ய விரும்பினார். அதனால் அழகற்ற உருவம் ஒன்றினைப் பெற்று, கரிய நிறத்துடனும் கொடிய கண்களுடனும் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிவ பெருமானைத் தொடர்ந்து செல்லலாயினர். ஆனால் முனிவர்களோ அவ்வுருவத்தை ஏளனமாகவும், கடுமையான சொற்கள் கூறியும் விரட்ட, சிவபெருமானும் அவ்விடத்தி னின்று மறைந்தார். முனிவர்கள் உடனே பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூற, பிரம்மா வெகுண்டு “முட்டாள்களே! நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை உணரவில்லையா? வந்தது வேறு யாருமல்லர், சிவபெருமானேதான். உங்களை சோதனை செய்யவே அப்படி ஒரு வடிவம் எடுத்து உங்கள் விருந்தினனாக வந்தார். விருந்துண்ண வந்தவர்களை அன்புடன் உணவிட வேண்டுமே தவிர, அவர்கள் அழகான வர்களா இல்லையா என்று பார்த்து உபசரிக்கக் கூடாது. உங்களுக்குச் சுதர்சனனின் கதை தெரியுமா? அதை இப் பொழுது கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, முனிவர் களுக்குக் கதை சொல்லத் துவங்கினார். சுதர்சன முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் மனைவியிடம், வரும் விருந்தினர்களை எவ்வாறு அன்புடன் உபசரிக்க வேண்டும் என்றும், விருந்தினர்களை உதாசீனப் படுத்துவது சிவபெருமானை அவமானப்படுத்துவது போலாகும் என்றும், விருந்துண்ண வருபவர் ஒவ்வொருவரும் சிவபெருமான் என்றே எண்ண வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஒரு சமயம், தர்ம தேவதை சுதர்சன முனிவரையும் அவர் மனைவியையும் பரீட்சை செய்து பார்க்க விரும்பினார் பிராமண வடிவம் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தார் முனிவர் வீட்டில் இல்லாத பொழுதும், அவர் மனைவி தர்ம தேவதையினை நன்கு உபசரித்து அன்புடன் உணவு