பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 பதினெண் புராணங்கள் முனிவர்களும் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு வருடம் கடுமையான தவத்திற்குப் பிறகு அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார். கடுமையான விழிகளும், சாம்பலை உடல் மீது பூசிக்கொண்டு, அழகற்ற உருவத்துடன் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டில் இங்கும் அங்கும் உலாவினார். முனிவர்களும் இம்முறை சிவபெருமானைத் தெரிந்து கொண்டு தம் மனைவியருடன் மலர்களால் அர்ச்சித்தனர். சிவபெருமான் மனமகிழ்ந்து அம்முனிவர் களுக்கு நல்ல அறிவுரைகள் கூறினார். அவற்றுள், சாம்பல் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் அவர்கட்கு அறிவுரை கூறினர். ததீசி கதை : ததீசி என்ற பிராமணனும், கபா என்ற அரசனும் நண்பர்களாய் இருந்தனர். கபா சத்திரியனாகவும், ததீசி பிராமணனாகவும் பிறந்திருந்தாலும், இருவரும் இணையற்ற அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை பிராமணன் உயர்ந்தவனா, சத்திரியன் உயர்ந்தவனா என்ற வாதம் இவர்களுக்குள் தோன்றி அந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறிவிட்டது. ததீசி என்ற பிராமணன் தான் பிராமணன் என்ற கர்வம் கொண்டு, தான் யாரை வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தான். கபாவைப் பொறுத்தமட்டில், முன்னொரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி செய்த காரணத்தினால் இந்திரனிடத்து இருந்த வஜ்ராயுதம் கபாவுக்குப் பரிசாகக் கிடைத்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு எதிரே இருந்த பிராமணன் மண்டையில் அரசன் அடித்தான். பிராமணன் உடம்பு இரண்டாகப் பிளந்தது. ஆனால் அவன் சாவதற்கு முன் தன்னைக் காப்பாற்றும்படி சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டு இறந்தான். இறந்தவர்களை எழுப்பும், மிருத்த சஞ்சீவினி என்ற மந்திரம் சுக்ராச்சாரியார் ஒருவருக்கே