பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/500

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலிங்க புராணம் 471 தெரியும். பிராமணன் சாகுமுன், சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டபடியால் அங்கு தோன்றிய அசுரகுரு இரண்டாகப் பிளந்து கிடந்த பிராமணன் உடம்பை ஒன்றாக ஆக்கி அதற்கு உயிரும் கொடுத்தார். அம்மட்டோடு இல்லாமல், பிராமணரே! மிருத்த சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். நீயும் சிவனை நோக்கித் தவம் செய்து இம்மந்திரத்தைக் கற்றுக் கொள்வாயாக’ என்று கூறினான். சுக்ராச்சாரியாரின் அறிவுரையைக் கேட்ட ததீசி சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவன் எதிர்ப்பட்டவுடன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மூன்று வரங்கள் பெற்றுக் கொண்டான். அவையாவன: முதல் வரத்தின்படி ததீசா பெரும் செல்வனாக ஆயினான், இரண்டாவது வரத்தின்படி ததீசாவின் எலும்புகள் வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றன. மூன்றாவது வரத்தின்படி யாரும் தன்னைக் கொல்ல முடியாத சக்தியையும் பெற்றான். இவ்வரங்களைப் பெற்ற ததீசி கபாவிடம் சென்று அவனை எட்டி உதைத்தான். உடனே கபா தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தை ததீசியின் மார்பை நோக்கி அடித்தார். ஆனால் என்ன அதிசயம்! வஜ்ராயுதம் இரும்பில் பட்டுத் தெறித்தது போல், கணிரென்ற சப்தத்துடன் கீழே விழக் கண்டான். ததீசியிடம் தன் கைவரிசை செல்லாது என்பதை அறிந்த கபா, விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். விஷ்ணு தோன்றியவுடன், ததீசியை வெல்வதற்குரிய ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கபா கேட்டவுடன், விஷ்ணு ததீசி சிவனிடம் பெற்ற வரங்கள் காரணமாக அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் ஏழை பிராமண வடிவத்தில் சென்று ததீசியிடம் ஏதாவது செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் பிச்சை ஏற்கப் போகும் பிராமண வடிவத்தில் ததீசியிடம் வந்தான் விஷ்ணு. இவருடைய சூழ்ச்சியை எளிதாக அறிந்து