பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 பதினெண் புராணங்கள் கொண்ட ததீசி, “பிராமண வடிவத்தில் வருகின்ற விஷ்ணுவே வருக உம்மையும் உம்முடைய வேஷத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியாதென நினைத்தீரா? அல்லது பிராமண வடிவத்தில் வரும் தாம் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன் என்று நினைத்தீரா” “விஷ்ணுவே! உம்முடைய உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமெனக் கோரும், பார்க்கலாம் என்றான். உடனே விஷ்ணு, ததீசி, நான் கடாவைக் கூட்டிக் கொண்டு இங்கு வருகிறேன். அவனைக் கண்டவுடன், எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல் என்று சொல்லி விட்டுப் போன விஷ்ணு, உடனடியாக கடாவை அழைத்துக் கொண்டு ததீசியின் முன் வந்து நின்றான். ததீசி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் ஒரு சிவபக்தன், என்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றான். இதைக் கேட்ட விஷ்ணு கோபம் அடைந்து சுதர்சன சக்ரத்தை விட அது ததீசியை ஒன்றும் செய்யாமல் பூமியில் விழுந்தது. இந்த நிலையில் ததீசி 'விஷ்ணுவே! ஏன் சும்மர் இருக்கிறீர். உம்முடைய பிரம்மாஸ்திரம் விட்டுப் பாரும். விஷ்ணு பிரம்மாஸ்திரம் விட அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது மற்ற தேவர்கள் எல்லாம் துணைக்கு வந்து, ததீசியின் மேல் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகித்தனர். அவை அனைத்தும் ததீசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாகச் சலித்துப் போன ததீசி கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து தேவர்கள் மேல் விட்டான். அந்தத் துரும்பு சிவனின் பல திரிசூலங்களாக மாறி, தேவர்களை விரட்டத் துவங்கியது. தங்களுடைய அஸ்திரங்கள் அனைத்தும் ஒன்றும் செய்ய முடியாத போது, விஷ்ணு தன்னைப் போலவே தோற்ற மளிக்கும் ஆயிரக்கணக்கான விஷ்ணுக்களை உண்டாக்கினார். ததீசி அவை அனைத்தையும் ஒரு நொடியில் எரித்து விட்டான்.