பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 475 அவர்களால் இவ்வுலகத்திற்கும் பல அரசர்களுக்கும் நற்காரியங்கள் பல நிகழ வேண்டி இருத்தலின் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவறு என அறிவுரை வழங்கினாள் பூமி தேவி. அதே நேரத்தில் தின்னப்பட்ட வசிட்டனின் மூத்த மகன் சக்திரியின் மனைவியாகிய அத்ரிஷ் யந்தி ஓடிவந்து, மாமனை வணங்கி உங்கள் பெயரனை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் என்னை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் இறப்பது சரியன்று. இந்தப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கிப் பெரியவனாக ஆக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா என்று கூறியவுடன் வசிட்டனும், அவன் மனைவியும் தங்கள் இடத்திற்கே திரும்பி விட்டனர். உரிய காலத்தில் அத்ரிஷ்யந்தி ஆண் குழந்தை பெற்றாள். அக்குழந்தையே பிற்காலத்தில், பராசரன் என்ற பெயருடன் மிக்க புகழுடன் வாழ்ந்தது. நாளாவட்டத்தில் வளர்ந்து இளைஞனான பராசரன், தன் தாயைப் பார்த்து, எல்லோருக்கும் தந்தை இருக்கிறார்கள். எனக்கு மட்டும் இல்லையே ஏன் என்று கேட்டபொழுது, தாய் அத்ரிஷ்யந்தி நடந்தவற்றைக் கூறினாள். உடனே அந்த சிறிய குழந்தையாகிய பராசரன், நான் சிவனைக் குறித்துத் தவம் செய்யப் போகிறேன். சிவனிடம் வரங்கள் பெற்று, ராட்சசர்கள் வாழும் மூன்று உலகங்களையும் அழித்து விடுவேன் என்று கூறினான். இதை அறிந்த வசிட்டர் அவனை அழைத்து, "பராசரா! இத்தகைய கொடுமைகள் உலகத்தில் எப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒருவன் தவறிழைக்க, அதனால் யாதொரு குற்றமும் செய்யாத அனைவரையும் அழிப்பேன் என்று கூறுவது தவறாகும். சிவனை நினைத்துத் தவம் செய்து ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆற்றலைத் தவறான வழிகளில் பயன்படுத்தக்