பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/506

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலிங்க புராணம் 477 பெற்றான். இவ்வரத்தினைப் பெற்றதனால், மூன்று உலகங் களையும் வென்று, தேவர்களை அவ்வுலகத்தினின்று விரட்டினான். இந்திரனும் மற்ற தேவர்களும், விஷ்ணுவுடன் சேர்ந்து மந்தார மலைக்குச் சென்றனர். அந்தகன் தேவர்களைத் துரத்திக் கொண்டு மந்தாரமலைக்குச் சென்றான். சிவபிரானைப் பார்த்த தேவர்கள், அந்தகன் செய்யும் கொடுமைகளைக் கூறி, தாங்கள் எங்கு சென்றாலும் அந்தகன் அங்கு வந்து தங்களைத் துரத்துவதாகவும், சிவபெருமான் மட்டுமே தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியும் என்றும் கூறினர். சிவபெருமானும் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, அந்தகனைக் கொல்லச் சென்றார். அந்தகன் தனியாக இல்லாமல், கோடிக்கணக்கான அரக்கர்களைத் தன்னுடன் வைத்திருந்தான். அவர்கள் அனைவரையும் எரித்துவிட்டு, அவன் மார்பைக் குத்தி, அதை நேரே விண்ணில் தூக்கினார். அசுரன் சூலாயுதத்தில் குத்தப்பட்டு, விண்ணில் தொங்குவது கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மூவுலகினரும், சிவபெருமானை வழிபட ஆரம்பித்தனர். அந்தகனைப் பொறுத்தவரை, சிவபெருமானின் சூலாயுதத்தால் குத்தப்பட்ட நொடிப்பொழுதிலிருந்து, அவனுடைய கெட்ட எண்ணங்கள் அனைத்தும் அவன் மனத்திலிருந்து விலகிவிட்டன. அவன் சிவனை தியானிக்க ஆரம்பித்தான். அவன் தியானத்தில் மனம் மிக மகிழ்ந்த சிவபெருமான் அந்தகனை நோக்கி, “ஹிரண்யாக்ஷாவின் மகனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்தகனும், "ஐயனே! நான் என்றென்றும், எப்பொழுதும் உன்னை நினைத்து, உனக்கு நன்றியுடைய வனாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் உன்னுடனேயே நான் இருக்க வேண்டும்" என்று வேண்டிக்