பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 பதினெண் புராணங்கள் சண்டைக்குப் பிறகு விஷ்ணு ஜலந்தரனிடம் தோற்றுவிட்டார். அவரை வென்ற எக்களிப்பில் ஜலந்தரன் பெரிதும் கர்வம் அடைந்தவனாய், விஷ்ணுவே என்னிடம் தோற்றுவிட்டதால் நான்தான் இனி அனைத்திற்கும் தலைவன் என்று தருக்கித் திரிய ஆரம்பித்தான். உலகை ஒருமுறை சுற்றிப்பார்த்த அவன் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிந்து விட்டனர். எஞ்சி இருப்பவர் சிவன் ஒருவரே ஆவார். அவரையும் போரில் வென்றுவிட்டால், அனைத்திற்கும் தலைவன் நானே என்ற புகழ் நிலைத்துவிடும். இவ்வாறு நினைத்து சிவனிடம் சென்று, 'உம்மிடம் சண்டையிட வந்துள்ளேன். சண்டைக்கு வருக! என்று அழைத்தார். சிவன் அலட்டிக் கொள்ளாமல் தமது கட்டைவிரலை சமுத்திரத்திற்குள் நுழைத்து இப்படியும் அப்படியும் ஆட்ட, கடலுக்குள் இருந்து சுதர்சன சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே, சிவன் ஜலந்தராசுரனே! சக்கரத்தை எடுத்து முடிந்தால் உன் தோளின் மீது வை பார்க்கலாம். இதை நீ செய்துவிட்டால் உன்னுடன் போர் செய்ய நான் தயார் என்றார். துக்குதற்கு அரிதான சக்கரத்தை வெகுபாடுபட்டு ஜலந்தரன் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டவுடன் அந்தச் சக்கரம் அவன் தலையை உடம்பில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து சிவனுடைய ஆயிரம் திருநாமங்கள், தட்சன் செய்த யாகம், பார்வதி தவம், சிவ-பார்வதி திருமணம், கார்த்திகேயன் பிறப்பு உபமன்யுவின் கதை ஆகியவை இலிங்க புராணத்தில் ஒரளவு விரிவாகவும் அதே நேரம் அடக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. முடிவுரை லோமஹர்ஷனர், இலிங்க புராணத்தைப் படிப்பதால் அதிக புண்ணியம் ஏற்படும் என்று கூறி முடித்தார்.