பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 483 மாந்தர்களிடத்து இல்லாததும் அவதாரங்களுக்கே உரியதும் ஆன பண்புகளாகும். அவதாரங்கள் பகவான் என்று குறிக்கப்படுகின்றன. இச் சொல்லில் உள்ள 'பக' என்ற பகுதிக்கு ஆறு பண்புகள் உண்டு. அவையாவன : சிரியை யrார ஐஸ்வர்யா விiயா ஞானம் வைராக்கியம் ஆகியவை யாகும. வராகம் என்ற சொல்லை வரா என்றும் அக என்றும் பிரித்துக் காட்டுகிறது வராக புராணம். வரா என்றால் போர்த்துபவர் என்பது பொருளாகும். அகா என்றால் முடிவில்லாப் பொருளுக்கு ஒரு முடிவை கற்பிப்பவர் எனப் பொருள்படும். அப்படியானால் வராக என்ற சொல்லுக்கும் அனைத்தையும் போர்த்துபவன் என்ற பொருளும், எல்லையில்லாப் பொருளுக்கு ஒரு எல்லை கற்பிப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். வராக அவதாரத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முற்பட்ட குழப்பமான காலத்தில் இருளில் கிடந்த பூமியைத் தூக்கி நிறுத்துபவ ராகும். உதயகிரியில் உள்ள குகைக்கோயிலில் வராக அவதாரம், மனித உடலும், வராக முகமும் கொண்டுள்ள சிற்பம் உள்ளது. தாமரை மாலையும், இடுப்பில் வேட்டியும், உத்தரியமும் அணிந்துள்ளது. தன்னுடைய இடது காலைத் தூக்கி, நாகமாகிய சேஷன் தலையில் வைத்திருக்கிறது. வலப்புறக் கொம்பைப் பற்றிக் கொண்டு பூமிதேவி பெண்வடிவில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் கடலும், முனிவர்கள் முதலானோர் வராகத்தை வணங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.