பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 பதினெண் புராணங்கள் 10) குஹ்ய உபநிஷதஆசன : வராகம் அமர்ந்திருக்கின்ற அமைப்பு, உபநிஷதங்களை ஆய்கின்றவர்கள் என்று கூறி அமர்ந்து சிந்திப்பது போல் உள்ளது. கூர்மையான அறிவு படைத்த ஒரு சிலர் மட்டுமே இதில் ஈடுபட முடியும். இந்த வராக கற்பனை தோன்றுவதற்கு ஆகாயத்தில் உள்ள மிருக சீரிஷம் என்ற தட்சத்திரக் கூட்டம் இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு வர7கம் போல் இருப்பது காரணமாய் இருந்திருக்கலாம் என ரிக்வேதம் பேசுகிறது முதலில் நாம் அனைவரும் விஷ்ணுவை வணங்குவோ É f}}T.5}, முன்னொரு காலத்தில் பிருத்வி ஆனவள் விஷ்ணுவிடம் சென்று வணங்கி, பின்வருமாறு பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்ப முடிவிலும் என்னைக் காப்பாற்றுகின்றவர் மச்சமாகவும், ஆமையாகவும், வராகமாகவும், மாறிமாறி வந்து என்னைக் காப்பாற்றி நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமாறு செய்கின்றவர் தாங்களே ஆவீர். இப்படி எங்களுடைய அறிவுக்குப் புலப்படாத வகையில் பலவற்றிலும் ஊடுருவி நிற்கும் தங்களை நாங்கள் கண்டுகொள்வது எளிதன்று. தங்களுடைய முழுவன்மை என்ன என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. தங்களின் உண்மை சொரூபம் என்ன? தங்களை அடைதற்குரிய உண்மையான வழி யாது? பிரபஞ்சப் படைப்பு என்பது எவ்வாறு ஆரம்பித்து- எவ்வாறு முடிகிறது? நாலு யுகங்கள் என்று சொல்லப்படுபவற்றின் உண்மையான இயல்புகள் யாவை? பிருத்வியின் இந்த வினாக்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வராகம் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தது. அந்த வராகத்தின் வயிற்றில் பிரபஞ்ச உற்பத்தியில் காணப்படும் முட்டை இருந்தது. அம்முட்டைக்குள் இனி