பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 489 நிற்கிறாய்?” என்று கேட்டேன். கேட்டவுடன் அப் பெண்ணிட மிருந்து மூன்று ஒளிக் கற்றைகள் தோன்றி மறைந்தன. வியப்பால் வாயடைத்து நின்ற நாரதனைப் பார்த்து, அப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். நாரதா! என் பெயர் சாவித்திரி என்பதாகும். நீ பார்த்த மூன்று ஒளிக் கற்றை களும் மூன்று வேதங்கள். நீ என்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்கும்படி நாரதனாகிய உன்னுடைய ஞானத்தைக் கவர்ந்துகொண்டேன். என்னிடமிருந்து முதலில் புறப்பட்ட ஒளி ரிக்வேதமாகும். அதை வாய்விட்டுப் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவர். ரிக்வேதமே நாராயண சொரூபம் ஆகும். இரண்டாவதாக உள்ள யஜுர் வேதம் பிரம்ம சொரூபமே ஆகும். மூன்றாவது உள்ள சாமவேதம் சிவசொரூபம் ஆகும்.' சாவித்திரி தேவதையைப் பார்த்து நாரதன், ‘என்னுடைய அறிவை எல்லாம் பறித்துக் கொண்டாயே, இழந்துவிட்ட அறிவை எப்படிப் பெறுவேன்’ என்று கேட்டவுடன் சாவித்திரி, 'இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ இழந்த அறிவைப் பெறுவாய், உன் போன ஜன்மம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார். உடனே நாரதரும் அவ்வாறே செய்தார். பழம்பிறப்பு பற்றிய விளக்கம் நாரதருக்குத் தோன்ற லாயிற்று. அந்தப் பிறப்பில் நாரதர் சரஸ்வதி பிராமணனாகப் பிறந்து வாழ்ந்தார். இந்த மானிடப் பிறப்பே வீண் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் என்பவை எல்லாம் மாயை என்றும் காட்டிற்குச் சென்று தவம் செய்வதுதான், செய்யப்பட வேண்டிய காரியம் என்றும் உணர்ந்தார். உடனே தன் சொத்து முழுவதையும் மகனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று தவம் புரியலானார். அவர் தவத்தை மெச்சி விஷ்ணு எதிரே வந்த பொழுது, நான் இந்த உடம்புடன் விஷ்ணுவிடம் கரைந்து விட வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். இந்த உடம்புடன்