பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 பதினெண் புராணங்கள் அத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று கூறியவர் அவருக்கு நாரதர் என்ற பெயரையும் கொடுத்து மறைந்தார். நாரதர் இந்த உலகத்தில் நெடுநாள் வாழட்டும், என்று கூறி விட்டு விஷ்ணு மறைந்து விட்டார். நீண்ட காலம் தவம் செய்து இறந்த பிறகு பிரம்மலோகம் சென்று அங்கு நீண்ட காலம் தங்கிவிட்டு, பிரம்மனுக்கு மகனாக நாரதர் என்ற பெயருடன் பிறந்தார். அடுத்தபடியாக நாரதர், பிரியவரதனை நோக்கி அரசே! அடியிற் கண்ட விஸ்வ மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப் போகிறேன். அதை நன்கு பயன்படுத்திக் கொள்வாயா என்று கூறி ஒரு பாடலைக் கூறினார். ஆயிரக்கணக்கான கண்கள், கைகள், கால்கள் உடைய பரம்பொருளே! உனக்கு வணக்கம், சூரியனையும், சந்திரனை யும் கண்களாக உடைய பரம்பொருளுக்கு வணக்கம். சத்திய யுகத்தில் வெள்ளை உடையும், திரேதா யுகத்தில் சிவப்பு உடையும், துவாபர யுகத்தில் மஞ்சள் உடையும், கலியுகத்தில் கறுப்பு உடையும் அணிந்து காட்சிதரும் பரம்பொருளே, உன்னை வணங்குகிறேன். கேடயம், வாள், கதாயுதம், தெய்வீகத் தாமரை ஆகியவற்றை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பவரே உனக்கு வணக்கம். வராக புராணம், நாராயணனைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறது. பூமிதேவி : வராகமே! நாரணனும் பரப்பிரம்மமும் ஒருவரா? அல்லது பலரா? வராகம் : இருவரும் ஒருவரே ஆவர். என்றாலும் நாராயணனை நேரடியாக தரிசிப்பது என்பது கடினமான காரியம். அவர் எடுக்கும் பல்வேறு அவதாரங்கள் மூலமே