பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 491 அவரைக் காணமுடியும். பிரம்மனும், சிவனும் நாராயணனின் ஒரு பகுதியே ஆவர். பஞ்ச பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். பிரபஞ்சம் முழுவதுமே நாராயணனின் பல்வேறு சொரூபங்கள் ஆகும். அஷ்வசீரா என்ற மன்னன் கபில முனிவரிடம் நெருங்கிப் பழகிக்கொண்டிருந்தான். அவரைப் பெரிய தவமுனிவர் என்று கருதினானே தவிர, அவர் உண்மையில் யார் என்பதை அவன் அறியவில்லை. ஒருநாள் மன்னன் கபிலரிடம் வந்து முனிவரே! நாராயணனை தரிசனம் பண்ண நினைக்கிறேன். அது எப்படி முடியும் என்று கேட்டார். உடனே முனிவர், இரண்டு நாராயணர்கள் இருக்கின்றார்களே, நீ எந்த நாராயணனை தரிசனம் செய்ய விரும்புகிறாய் என்றார். வியப்படைந்த மன்னன், நீங்கள் சொல்லுகின்ற இரண்டாவது நாராயணன் யார் என்றார். கபிலர், அந்த நாராயணனை எளிதில் காணமுடியாது. இதோ என்னைப் பார்க்கிறாய் அல்லவா? நானும் நாராயணன்தான் என்றார். அதுகேட்ட மன்னவன், அது எப்படி முடியும். நான்கு கைகளும், சங்கு சக்கரம், கருடவாகனம் உடையவரல்லவா நாராயணன். இது எதுவுமே உங்களிடம் இல்லையே என்றான் மன்னன். கபிலர் சிரித்துக் கொண்டே அரசனே! என்னை நன்றாகக் கூர்ந்து பார், என்றார். மன்னன் அவரைக் கூர்ந்து பார்க்க. நான்கு கரங்களும், சங்கு சக்கரமும், கருடனும் ஆக கபிலர் காட்சி அளித்தார். வியப்படைந்த மன்னனுக்குக் கபிலர் விளக்கம் கூறுகிறார். “நாராயணனைப் பொறுத்தவரை வெளிப்பட்டு நிற்கும் நிலை, வெளிப்படாது உள்ளடங்கி நிற்கும் நிலை என இரண்டு பகுதிகள் உண்டு. வெளிப்படாத நிலையை யாரும் காணமுடியாது. அது ஒரு பொருளும் அன்று. அதற்கு ஒரு பெயரும் இல்லை, வடிவமும் இல்லை. ஆனால் வெளிப்பட்டு நிற்கும் நிலையில் அவதாரங்களாகத் தோன்றியதோடல்லாமல்,