பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 493 சிறந்ததா என்பதை எங்களுக்குத் தெளிவிக்க வேண்டும் என்று வேண்டினர். அதைக் கேட்ட பிரகஸ்பதி நான் இப்பொழுது ஒரு கதை சொல்லப்போகிறேன். அதிலிருந்து உங்கள் வினாவிற்கு விடையை அறிந்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டுக் கதையைச் சொன்னார். கங்கைக் கரையில் சம்யமனா என்ற பிராமணன் வசித்து வந்தான். வேதங்கள் படித்து, அறிவு வளர்த்து ஒரளவு ஞானம் பெற்றவனாகவே இருந்தான். பக்கத்தில் குடியிருந்த வேடன் நிஷ்டுரகா, எந்தக் கலையையோ, ஞானத்தையோ கற்கவில்லை. பறவைகளை வேட்டையாடுவதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான். ஒருநாள் இந்த பிராமணன் அந்த வேடனைப் பார்த்து இத்தனை உயிர்களைக் கொல்கிறாயே, நீ செய்வது பாவமில்லையா என்றார். அதற்கு நிஷ்டுரகா வேடன் விடை கூறினான். பிராமணனே! யார் யாரைக் கொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்த்தீரா? எல்லா உடல்களிலும் தங்கி இருக்கும் ஆன்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. உடம்பு செய்கின்ற செயல்களுக்கு ஆன்மா பொறுப்பாவதும் இல்லை. எல்லா உடம்புகளிலும் பரவி இருந்தாலும் ஆத்மா ஒன்றே ஆகும் அல்லவா? எந்த ஒரு தனிப்பட்ட உயிருடன் கூடிய உடம்புக்குத் தீமை செய்தால், அது எல்லா உடம்பி லுள்ள உயிர்களுக்கும் சேரும். ஆகவே ஒரு தனிப்பட்ட உயிரை உடம்புடன் கூடிய உயிரைப் பிரிக்க முடியாது. இதை நீர் புரிந்து கொள்வதற்கு நான் ஒரு செயல் செய்து காட்டுகிறேன் என்று கூறி நெருப்பைப் பற்ற வைத்தான். அது கொழுந்து விட்டு எரியும் பொழுது பிராமணனைப் பார்த்து இந்தத் தீ இத்தனை நாக்குகளோடு எரிகிறதே, ஏதாவது ஒரு நாக்கை மட்டும் எடுத்து அணைத்துப் பார் என்றான். பிராமணன் முயன்றபொழுது எந்த நாக்கில் தண்ணீர் பட்டாலும் அது