பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 பதினெண் புராணங்கள் தீ முழுவதையும் அனைத்துவிடக் கண்டான். இப்பொழுது வேடன் சொன்னான், எந்தச் செயலையும் நான் செய்கிறேன் என்று நினைத்தால் அது ஆணவத்தின் எல்லையாகிவிடும், நாராயணன் என்னைக் கருவியாகக் கொண்டு செய்கிறான் என்று நினைத்தால் இதில் கோபிப்பதற்கு, அகங்காரம் கொள்வதற்கு இடமே இல்லை என்று கூறியவுடன், தேவ உலகினின்று விமானம் வந்து அவ்வேடனை அழைத்துச் சென்றுவிட்டது. இக்கதையைக் கூறிவிட்டு பிரகஸ்பதி, அரசன், முனிவன் ஆகிய இருவரையும் பார்த்து உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா என்று கேட்க அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டனர். இக்கதையினைக் கேட்ட அஷவசீரா தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுக் காட்டிற்குத் தவம் புரியச் சென்றான். 6) BR தன் மகன் விவஸ்வானிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு புஷ்கரா தீர்த்தம் சென்று யாகம் ஒன்றினைச் செய்தார். அந்த யாகத்தினின்று ஒர் உருவம் வந்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று வசுவைப் பார்த்துக் கேட்டது. வசுவும், நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டான். அந்த உருவம் கீழ்க்கண்ட கதையினைச் சொல்லத் துவங்கியது. முற்பிறப்பில் வசு காஷ்மீரத்தில் அரசு செலுத்தி வந்தான். அவன் ஒருமுறை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அப்பொழுது ஒரு முனிவர், மான் வடிவத்தில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தார். மானை முனிவர் என்று அறியாத வசு, அம்மானைக் கொன்றுவிட்டான். உண்மையை அறிந்து வருந்திய அரசன், பிராயச்சித்தங்கள் பல செய்தான். ஒருநாள் லசு அரசன் தாங்கொணா வயிற்றுவலி காரணமாக இறந்து