பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 495 போனான். அவ்வாறு இறக்கும் சமயத்தில் 'நாராயணா' என்று கூறியபடி உயிர் துறந்தான். யாக குண்டத்தில் இருந்து வெளிவந்த உருவம் "நான் ஒரு ராட்சசன். வசு அரசனின் பிரம்மஹத்தி தோஷத்தால் நான் உன் உடம்பில் புகுந்து கொண்டேன். அதனாலேயே மிகுந்த வயிற்றுவலியினால் நீ துன்பமுற்று இறந்து போனாய்" என்று கூறிற்று. அவ்வாறு இறந்த மன்னன் நாராயணா என்று கூப்பிட்டதால் வைகுண்ட வாசிகள் வந்து, ராட்சசனிடமிருந்து அரசனை மீட்டு அழைத்துச் சென்றனர். அரசன் வைகுண்டத்தில் நீண்ட ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் இருந்து பின் மீண்டும் காஷ்மீரத்து அரசனாகப் பிறந்தான். பிரம்ம ராட்சசனும் மீண்டும் அரசன் உடம்பில் புகுந்து கொண்டான். அரசன் ஒரு யாகம் செய்து விஷ்ணுவின் பெயரைக் கூறியவுடன், ராட்சசன் அரசன் உடம்பிலிருந்து வெளியே வரும்படி ஆயிற்று. ஆனால் இம்முறை விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டதால், பிரம்ம ராட்சசனின் பாவங்கள் அனைத்தும் விலகி, அவன் நேர்மையானவனாக மாறினான். வசு அரசன் அவனைப் பாராட்டி அவனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினான். அந்த வரத்தின்படி பிரம்மராட்சசன் ஒரு வேடனாகப் பிறந்து தர்மவியாதா என்ற பெயருடன், நேர்மையானவனாகத் திகழ்வான் என்று கூறினான். வரத்தைக் கொடுத்த வசு அரசன், வைகுந்தலோகம் சென்றான். ரைவியாவின் கதை ஒருமுறை ரைவியா என்ற முனிவன் தனது குடிலில் அமர்ந்திருக்கும் பொழுது, மற்றொரு முனிவன் திடீரென்று உள்ளே நுழைந்து, ரைவியாவுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான். தெரிவித்த உடனேயே வந்தவன், காற்றடைத்த பையைப் போல உடம்பு பருமனாகிக் கொண்டே போக, மிக மிகப் பெரிய வடிவத்தை எடுத்தான். வியப்பில் ஆழ்ந்த