பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/525

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


496 பதினெண் புராணங்கள் ரைவியா, முனிவனே! நீ யார்? என்னை ஏன் வாழ்த்தினாய்? என்ற இரு வினாக்களை ரைவியா கேட்க அந்த உருவம் பதில் கூறிற்று. முதலில் நான் யார் என்பதை நீ அறிந்துகொள். பிரம்மனின் நான்கு புதல்வர்களில் ஒருவனாகிய சனத்குமாரன் தான் நான். உன்னை வாழ்த்தியதற்கு ஒரு காரணம் உண்டு. நீ புண்ணிய தீர்த்தமாகிய கயைக்குச் சென்று உன் மூதாதையர் கட்குப் பிண்டம் போட்டாய் அல்லவா? அது ஒரு மிகச் சிறந்த காரியம், அதனால்தான் உன்னை வாழ்த்தினேன். அதன் சிறப்பை அறிய ஒரு கதை சொல்கிறேன் கேட்பாயாக என்று கூறிவிட்டு, கதை சொல்ல ஆரம்பித்தார் சனத்குமாரர். ஒருமுறை வைசால நாட்டை ஆண்ட விசாலா என்ற மன்னன், எல்லாச் செல்வங்களும் நிறைந்திருந்தாலும், தனக்கு மகன் இல்லை என்பதால் பெரிதும் நொந்து போய் இருந்தான். அமைச்சர்கள் முதலானோர் ஒன்றுகூடி ஆராய்ந்து, அரசே! கயைக்குச் சென்று உன்னுடைய முன்னோர்கள் திருப்தி அடையும் வகையில் பிண்டங்கள் போட்டால் உன் குறை நீங்கும் என்று கூறினார்கள். அப்படியே விசால மன்னன் கயைக்கும் சென்று, பிதுர்க்களுக்கு வழிபாடு செய்தான். அப்பொழுது ஆகாயத்தில் மூன்று வடிவங்கள் தோன்றி நின்றன. ஒரு வடிவம் தூய்மையான வெண்மை உடையது; மற்றொன்று சிவப்பு நிறமுடையது; மூன்றாவது வடிவம் கறுப்பு நிறம் கொண்டது. தோன்றிய மூன்று வடிவங்களில் வெண்மையான வடிவம் விசால மன்னனின் தந்தை, சிவப்பு வடிவம் அவன் பாட்டன், கறுப்பு வடிவம் மன்னனின் கொள்ளுப் பாட்டன் வடிவம். விசால மன்னனின் தந்தை எவ்வித பாவமும் செய்யாததால் வெண்மை நிறத்துடன் இருந்தார். அவன் பாட்டன், கொள்ளுப் பாட்டன் பூமியில் வாழ்ந்த பொழுது மிகுந்த தவறு செய்ததால் இந்நிறங்களைப் பெற்றனர். இப்பொழுது விசால மன்னன் கயையில் பிதுர்க்கள்