பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 பதினெண் புராணங்கள் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொள்ள அவளுக்கு எப்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறக்கிறதோ அப்பொழுது அவளுடைய சாபம் நீங்கும் என்றும், சாப விமோசனம் கூறினார். நர்மதை ஆற்றின் கரையிலேயே இந்தப் பெண் எருமை திரிந்து கொண்டிருக்கும் பொழுது அந்த ஆற்றில் ஒரு விசேஷம் நடைபெற்றது. சிந்து துவீபா என்ற முனிவனின் சக்தியால், நர்மதை ஆற்று நீர் ஒரு மாபெரும் சக்தியைப் பெற்றது. அந்த நேரத்தில் இந்தப் பெண் எருமை நர்மதை நீரில் குளிக்கவும், அவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் மூன்று உலகங்களும் யாருடைய பெயரைக் கேட்டவுடன் நடுங்குகின்றனவோ அந்த 'மகிஷாசுரன் ஆகும். - இதே மகிஷாசுரன் தான் வைஷ்ணவி தேவியை மணக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூதர்களை அனுப்பினான். வைஷ்ணவி தேவி தன்னையோ தன் பரிவாரங்களில் எந்த ஒருவரையுமோ கூட அவன் மணக்க முடியாது என்று சேதி அனுப்பி விட்டாள். அதன் பிறகு தேவபடைகள் அழிந்தாலும் வைஷ்ணவி தேவியும், அவரது துணைவியரும் போருக்கு எழுந்த பொழுது அசுரப் படைகள் அழிந்தன. இறுதியாக தேவியே, மகிஷாசுரனுடன் நேரடியாகப் போர் புரிந்தார். பல காலம் போர் புரிந்தபின், வைஷ்ணவி தேவி மகிஷனை வென்றாள் என்று வராக புராணம் கூறுகிறது. இக்கதையை விரிவாகச் சொல்லும் மார்க்கண்டேய புராணம், தேவி பாகவதம் ஆகிய அனைத்துமே துர்க்கைதான் மகிஷனைக் கொன்றவள் என்று பேசுகின்றனவே தவிர, வைஷ்ணவியின் பெயரைக் கூறவில்வை என்பதைச் சிந்திக்க வேண்டும்,