பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பதினெண் புராணங்கள் மகாபலி கதை முன்னொரு காலத்தில் தைத்தியர்கள் என்ற அசுர குலத்தில் வலி (மகாபலி) என்ற அரசன் ஆண்டு வந்தான். நேர்மை, அன்பு என்பவற்றில் மிகுந்து நின்றதாலும், எல்லை யற்ற வலிமை உடையவனாக இருந்ததாலும் அவனை யாரும் வெல்ல முடியவில்லை. எனவே தேவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் வாமனனாக வந்து வலிக்கு மோட்சம் தந்து, வலியின் நாட்டை தேவர் களுக்குத் தந்தார். தீர்த்த சிறப்பு வானதி ஆகிய கங்கையின் ஒரு பகுதியை பகீரதன் தன் முன்னோர்களுக்காகப் பூமிக்குக் கொண்டு வந்தான். உலக மக்களின் வாழ்வு மலர கெளதம முனிவன் கங்கையின் மற்றொரு பகுதியை பூமியில் பரவுமாறு செய்தான். அதனால் கங்கைக்கு கெளதமி என்ற தத்திதாந்தப் பெயருண்டாயிற்று. கெளதமி, கங்கைக்கு ஒரு இறங்கு துறைக்கு "கபோத தீர்த்தம்” (புறா தீர்த்தம்) என்ற பெயர் வரக் காரணம் வருமாறு:- ஒரு மரத்தில் வாழ்ந்த இரண்டு புறாக்களில் இரை தேடச் சென்ற பெண் புறாவைக் கொலைத் தொழில் புரியும் வேடன் ஒருவன் பிடித்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியிலேயே வந்து தங்கினான். பெண் புறாவைக் காணாமை யால் வருந்தி அழுத ஆண் புறாவின் குரலைக் கேட்டுப் பெண் புறா தான் கூண்டிற்குள் அகப்பட்டு இருப்பதைச் சொல்லி, “இயற்கையின் படைப்பில் ஒன்றையொன்று தின்றுதான் வாழ்கின்றன. எனவே அவனுக்கு நாம் உணவாவதில் தவறில்லை. அல்லாமலும் நாம் இருக்கும் இடத்திற்கு வந்து தங்கிய அவனுக்குக் குளிரைப் போக்கி உணவு தரவேண்டியது நமது கடமை." என்று பெண் புறா கூறியதைக் கேட்ட ஆண்