பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 501 வராக வடிவிலிருந்த விஷ்ணு, பிருத்விக்குச் சொன்ன சத்யதபா முனிவர் கதை சத்யதபா என்ற முனிவர் காட்டில் தவம் செய்து கொண் டிருந்தார். ஒரு முறை சுள்ளிகளைச் சேர்த்துக் கட்டுவதற்காக வெட்டின பொழுது அவருடைய கையிலுள்ள சுண்டுவிரல் வெட்டப்பட்டு தெறித்து விட்டது. வெட்டப்பட்ட விரலில் இருந்து ரத்தம் வராமல், சாம்பல் போன்ற பொடி வெளி வந்தது. துண்டிக்கப்பட்ட விரலை எடுத்து வெட்டுண்ட பகுதியில் வைத்து அமுக்கியவுடன் அந்த விரல் உடம்புடன் ஒட்டிக் கொண்டது. அந்த முனிவர் எந்த மரத்தடியில் தங்கி இருக்கும் பொழுது இந்நிகழ்ச்சி நடைபெற்றதோ அந்த மரத்தில் கின்னர தேவ ஜாதியைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் இந்த நிகழ்ச்சி முழுவதையும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட அதிசயம் தாங்காமல் அவர்கள் இருவரும் தேவேந்திரனிடம் சென்று தாங்கள் கண்டதைக் கூறினர். தேவேந்திரன் விஷ்ணுவிடம் சென்று இவர்கள் கூறியதை எடுத்துச் சொல்லி, அந்த முனிவனைச் சோதிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டான். இந்திரன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு ஒரு பன்றி வடிவெடுத்து சத்யதபா ஆசிரமத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒர் அம்பு பாதி குத்திக் கொண்டும், பாதி வெளியிலும் நின்றது. சற்று நேரத்தில் இந்திரன், வேடன் வடிவில் முனிவரிடம் வந்தான். முனிவரே உமது ஆசிரமத்தைச் சுற்றி பாதி குத்திய அம்புடன் ஒரு பன்றி சுற்றி வருவதைப் பார்த்தீரா? நான்தான் அந்த அம்பை எய்தேன். ஆனால் ஒரே ஒரு அம்பு குத்தினதால் அந்தப் பன்றி சாகவில்லை. இப்பொழுது அந்தப் பன்றிதான் என் குடும்பம் முழுவதற்கும் ஆகாரம் ஆக வேண்டும். ஆகவே பன்றி எங்கே போயிற்று என்று சொல்லும்” என்று கேட்டான்.