பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 பதினெண் புராணங்கள் இந்த நிலையில் சத்யதபா சிந்திக்கத் துவங்கினார். கடவுள் கொடுத்த ஐந்து உறுப்புகளும் ஒவ்வொரு பணிக்காகவே ஏற்பட்டுள்ளன. அடுத்ததொரு பணியை அது செய்யாது. கண் பார்க்கும். பார்த்ததைப் பற்றி வாயில்லாத காரணத்தால் அது சொல்லாது. மூக்கு மோக்கும். காது கேட்கும் என்றாலும் இவை ஒவ்வொன்றும் நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டுமானால் வாயின் உதவியை நாட வேண்டும். வாய், கண் பார்த்ததைச் சொல்லுமே தவிர, பார்க்கும் சக்தி வாய்க்கு இல்லை. எனவே கண் பார்த்ததை வாய் சொல்ல வேண்டும் என்று அவசிய மில்லை. முனிவரின் கண் பன்றியைப் பார்த்திருந்தாலும் அவர் வாய் பேசாது நின்று விட்டார். பொய் கூறாமலேயே முனிவர் பன்றியைக் காப்பாற்றிவிட்டார். இதனால் மகிழ்ந்த இந்திரனும், விஷ்ணுவும் முனிவரின் எதிரே காட்சி தந்தனர். இதனால் சத்யதபா என்ற முனிவரும் அவர் குரு அருணியும் விஷ்ணுவிடம் ஐக்கியமாயினர். அடுத்தபடியாக வராகம், பிருத்விக்குச் சொன்ன கதை சுவேதா என்ற மன்னன் இலவிருதவர்ஷா என்ற நாட்டை ஆண்டு வரும்பொழுது பல யாகங்களும், தியானங்களும் செய்தான். அவன் குருவான வசிட்டர், அரசே! இந்த தானங் களோடு உண்பதற்குரிய அரிசியையும் தானம் செய்யுங்கள் என்றார். பொன், வெள்ளி இவற்றின் சிறப்பில் தன்னை மறந்திருந்த மன்னன் அரிசி தானத்தை மிக மட்டமாகக் கருதினான். ஆகவே அவன் அரிசி தானம் செய்யவில்லை. சொர்க்கம் சென்ற சுவேதா உண்பது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் வேண்டுமான பொருள் சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டான். ஆனால் அரிசிச் சோறு தின்று பழகிய சுவேதாவிற்கு சொர்க்கத்தில் அரிசியே கிடைக்கவில்லை.