பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 503 உடனே அவன் பூமிக்குத் திரும்பி தான் இறந்த இடத்தை வந்து பார்த்தான். அங்கு பிண்டம் போட்ட அரிசி சிதறிக் கிடந்ததைக் கண்டு அதை உண்ண ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்த வசிட்டர், நான் சொல்லும்பொழுது நீ கேட்கவில்லை. அரிசி தானத்தை அலட்சியமாக நினைத்துவிட்டாய். இப்பொழுது தெரிகிறதா அதன் அருமை? இவ்வாறு அவனுக்கு அறிவுரை கூறிய வசிட்டர் மன்னன் சுவேதா விளங்கிக் கொள்வதற்காக மற்றொரு கதையும் எடுத்துக் கூறினார். விஷிதஷ்வா என்ற மன்னன் யாகம் செய்யும் பொழுது உணவுப் பண்டங்களையும் எள், அரிசி முதலானவற்றையும் தானம் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் கூறிய அறிவுரையைச் சட்டை செய்யாமல் இருந்தான். அதனால் அவன் சொர்க்கம் சென்று பசியினால் வாட நேர்ந்தது. எனவே தானம் செய்பவர்கள் உணவுப் பொருட்களையும் தானம் செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார். இதுவரை கூறிக் கொண்டு வந்த அனைத்தும் வராக புராணத்தில், வராக சம்ஹிதையின் ஒரு பகுதி ஆகும். இந்தப் பகுதி முதன் முதலில் பரப்பிரம்மத்தால், பிரம்மனுக்குச் சொல்லப்பட்டது. பிரம்மனில் இருந்து, புலத்தியனுக்கும், அடுத்து பரசுராமனுக்கும், அடுத்து உக்ரனுக்கும், அடுத்து மனுவுக்கும் சொல்லப்பட்டது. இதைச் சொல்லிக் கொண்டு வந்த வராகம், இந்த சம்ஹிதை போக புராணப் பகுதியை பிற்காலத்தில் வேதவியாச முனிவர் பாடல்களாகப் புனையப் போகிறார் என்றும், பிறகு அவரே லோமஹர்ஷனருக்கும், செளனகருக்கும் அதைச் சொல்லித் தருவார் என்றும், எதிர்காலத்தைப் பற்றி வராகம் கூறிற்று. இந்தப் பகுதியை கார்த்திகை துவாதசி அன்று படிப்பவர், அவர் விரும்பிய வற்றை எல்லாம் பெறுவர்.