பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/533

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


504 பதினெண் புராணங்கள் வராகம் பூமியை மீட்ட கதை சனத்குமார முனிவர், ஒரு முறை பூமிதேவியிடம் அவள் வராகத்தினால் காப்பாற்றப்பட்ட கதையினைக் கூறுமாறு கேட்டார். பூமிதேவியும் அக்கதையைக் கூறினாள். ஒருமுறை பூமியானது பாதாள உலகில் மூழ்கிப்போன போது, பூமி தேவி விஷ்ணுவிடம் வேண்டி தன்னைக் காப்பாற்றும்படிக் கேட்டாள். விஷ்ணுவைப் புகழ்ந்து அவள் பாடிய பாடல்களே கேசவ ஸ்துதி எனப்படும். இதனைப் படிப்பவர்கள், ஏழ்மை, பாவம் இவற்றினின்று விடுதலை பெறுவர். பூமிதேவி கூறியதைக் கேட்ட விஷ்ணு, மிகப் பெரிய வராக உருவம் எடுத்தார். ஆறாயிரம் யோஜனை உயரமும், மூன்றாயிரம் யோஜனை அகலமும் கொண்டிருந்தது அவ்வராகம். கடலினுள் புகுந்த வராகத்தினால் பூமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பல மலைகள் கடலினுள் விழுந்தன. வராகம், பூமியைத் தேடிக் கண்டுபிடித்து, தன் கொம்பு களிடையே வைத்து நீருக்கு மேலே கொண்டு வந்தது. ஆயிரம் வருடங்கள் தன் கொம்புகளிடையே பூமியை வைத்திருந்து, பிரபஞ்ச உற்பத்தியின் போது, பூமியை அதற்குரிய இடத்தில் வைததது. விஷ்ணுவைத் திருப்திப்படுத்துதல் எவ்வாறு ? பூமிதேவியை நோக்கி வராகம் சொல்லியதாவது: மக்கள் மேற்கொள்ளும் சடங்குகள், கிரியைகள், ஹோமங்கள் என்பவற்றால் நான் அதிகம் திருப்தி அடைவதில்லை. துவாதசி நாளன்று வெண்மையான உடை உடுத்திக் கொண்டு, வெண்மையான மலர்கள் கொண்டு விஷ்ணுவைப் பூஜித்தால் போதுமானது. அவ்வாறு பூஜை செய்பவர் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருசேர விஷ்ணுவை நினைப்பதில் ஈடுபடுவாரேயானால் அதைவிட விஷ்ணுவைத் திருப்தி