பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 505 செய்ய வேறு எந்த வழியும் தேவையில்லை. உண்மையான அன்பு ஒன்றையே விஷ்ணு விரும்புகிறார். சடங்குகளில் அன்புக்கு முக்கியத்துவம் இல்லை. ஆதலால் விஷ்ணு அதை அதிகம் விரும்புவதில்லை. நால்வகை வர்ணத்தாரும் விஷ்ணுவின் ஆசியைப் பெறத் தகுதி உடையவர். மேல்நால்வகையினரும் நற்பழக்கங்கள், துயசிந்தனை, பிறருக்குக் கொடுத்தல், அன்புடைமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்களேயானால் விஷ்ணுவின் ஆசியை எளிதில் பெற முடியும். சைவ உணவு உட்கொண்டு அமைதியாகவும், பொறி புலன்களை அடக்கிய முறையிலும், பிறரிடம் பகைமை, பொறாமை முதலிய தீக்குணங்கள் இல்லாமலும் யார் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்கள் எளிதில் விஷ்ணுவின் அருளைப் பெறுகிறார்கள். போதுமென்று மனத்தோடு வாழும் மனிதனையும், கணவனிடம் அன்பு கொண்ட மனைவியையும் விஷ்ணு அருள் செய்கிறார். விஷ்ணு மன்னிக்க முடியாததும், ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகிய சிலவற்றைக் காணலாம். 1. அசுத்தமான உணவை உண்ணுதல், 2. குளிக்காமலும், இறந்த உடலைத் தொட்டு, சுடுகாட்டில் எரித்து வந்தும் தன்னைத் தூய்மை செய்து கொள்ளாது விஷ்ணுவை வணங்குதல், 3 அமைதி இல்லா மனத்துடனும், யாரிடமாவது கோபம் கொண்ட மனநிலையிலும், 4. மீன் உணவு வாத்துக் கறி உண்ட பின்பு, 5. விஷ்ணுவிற்குப் படைக்காமல் உண்ணப் படுகின்ற உணவு, 5. மது உண்ட பின்பு, 7. பன்றிக் கறி உண்ட பின்பு, 8. இசைவு இல்லாமல் விஷ்ணு கோவிலைத் திறப்பதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை.