பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 507 மனுவின் மகன்களாக ஹத்தி, சுஹத்ரி இருவரும் பெரும் படையுடன் சென்று தேவர்களை அழிக்க ஆரம்பித்தனர். அச்சமயம் விஷ்ணு, எண்ணிலடங்கா உருவம் எடுத்து, இவர்களைச் சுமேரு மலையில் சண்டையிட்டு வென்றார். ஹத்ரி, சுஹத்தி என்ற இருவர் மட்டுமே மீதமிருந்தனர். அவர்களும் மந்தர மலைக்கு ஓடிவிட்டனர். அங்கு ஹத்ரியின் மகள் சுகேஸியும், சுஹத்ரியின் மகள் மிஸ்ரகேஸியும் இருந்தனர். மந்தர மலைக்கு வந்த துர்ஜயன், இவ்விரு அழகிய பெண் களைப் பார்த்து மயங்கி மணம் செய்து கொண்டான். அவனுக்கு இரு மக்கள் தோன்றினர். துர்வாச முனிவரின் வரத்தின்படி, துர்ஜயன் மூவுலகும் வென்று, இந்திரனை தேவருலகில் இருந்து விரட்டினான். ஒரு சமயம், வேட்டைக்குச் சென்ற துர்ஜயன், முனிவர் கெளரமுகாவின் ஆசிரமம் வந்தடைந்தான். அவனுடன் அவனது ஐந்து படைத்தலைவர்களும், அவர்களது சேனைகளும் உடன் வந்தனர். இவ்வளவு பேருக்கும் ஒரு முனிவரால் உடனே உணவு படைப்பதென்பது முடியக் கூடிய காரியமன்று. ஆனால் கெளர முனிவர் நாராயணனிடம் வேண்டி சிந்தாமணி என்ற ஒர் ஆபரணத்தைப் பெற்றிருந்தார். இந்த ஆபரணத்தைக் கையில் கொண்டு, ஒருவர் என்ன வேண்டும் என்று நினைத்தாலும், அது உடனே கிடைத்துவிடும். ஆகையால் கெளரமுகா முனிவர் துர்வஜாவிற்கும், அவனுடன் வந்திருந்த போராளிகள் அனைவருக்கும் வேண்டிய உணவு, தங்கும் இடம் மற்றும் அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தார். இவ்வளவு சக்தி வாய்ந்த சிந்தாமணி மாலையைப் பார்த்து மிகவும் ஆசை கொண்ட துர்ஜயன், தன் மந்திரியாகிய விரோசனனை அனுப்பிக் கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே, தன் சேனைகளை அனுப்பி மாலையினைக் கவர்ந்து