பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/539

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


510 பதினெண் புராணங்கள் கொள்ளும்படிக் கூறி அனுப்பினார் பிரம்மன். ருத்ரனும் அவ்வாறே செய்து, நீரிலிருந்து ஒளியுடன் கூடிய உடம்புடன் வெளியே வந்தார். தட்சன் ஒரு யாகம் செய்து வந்தான். நீரிலிருந்து வந்த ருத்ரன், இந்த யாகம் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த கோபம் கொண்டான். “பிரம்மா என்னிடம் படைக்கும் வேலையைக் கொடுக்க, அதனைச் செய்வதற்காக சக்தியைப் பெருக்கும் காரணத்தினால் நான் தவம் செய்யச் சென்றிருந்தேன். இன்னும் என்னுடைய தொழில் ஆரம்பிக்குமுன், இந்த யாகத்தை நடத்தியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள் இவர் களெல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள். இவர்களை நான் அழித்தே தீருவேன்” எனக் கூறினான், ருத்ரன். அவன் காதுகளில் இருந்து வெளிவந்த நெருப்புப் பொறிகளிலிருந்து அசுரர்களும் வெளிவந்தனர். இவர்கள் யாகத்தில் மிகுந்த குழப்பங்களை விளைவிக்க, பிரம்மன் தேவர்களை அனுப்பி ருத்ரனை அமைதிப்படுத்தும்படி வேண்டினான். அவர்களும் அவ்வாறே செய்து, தட்சன் மகளாகிய தாட்சாயணியை, ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தனர். இட்சன் பாகம் பற்றி மற்றப் புராணங்கள் கூறும் கதையி கிைன்று மாறுபட்ட கதையினை வழங்குகிறது வர7கபுராணம், ருத்ரனை மணந்த தாட்சாயணி, தன் தந்தை யாகத்தில் தன் கணவனை அவமானப்படுத்தியதை நினைவில் கொண்டு, இமயமலை சென்று கடும் தவம் புரிந்தார். தன் கணவனுக்கு அவமானம் செய்த தட்சன் கொடுத்த உடம்பு ஆதலால் அந்த உடம்போடு இருக்க விரும்பவில்லை. அதனால் தன் உடம்பை நீத்தாள், தாட்சாயணி. இமவான் மகள் பார்வதியாக மீண்டும் பிறந்தார். சிவனையே கணவனாக அடைய வேண்டும் என்று தவத்தில்