பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 25 புறா, அதற்கு உடன்பட்டு, தீ மூட்டி அவனுடைய குளிரைப் போக்கியது. பின் அதில் விழுந்து அவனுக்கு உணவாயிற்று. இவற்றின் உரையாடலைக் கேட்ட வேடன் பெண் புறாவைக் கூண்டில் இருந்து விடுவிக்க, “என்னையும் உண்க' என்று கூறி அப்பெண் புறாவும் தீயில் விழுந்து இறந்துவிட்டது. தேவ உலகத்தில் இருந்து விமானம் வந்து அந்த இரண்டு புறாக்களின் உயிர்களையும் ஏற்றிச் சென்றது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேடன் அன்றிலிருந்து நல்வாழ்வு வாழத் தொடங்கினான். கெளதமி கங்கையின் கரையில் இப் புறாக்கள் வசித்த இடம் கபோத தீர்த்தம் என்று பெயர் பெற்றது. கருட தீர்த்தம் நாகலோகவாசியான அனந்தனுக்கு மணிநாகன் என்ற ஒரு புத்திரன் பிறந்தான். கருடனைக் கண்டால், பாம்புகளுக்கு நடுக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை அறிந்த மணிநாகன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். தவத்தை மெச்சிய சிவபெருமான் கருடனால் ஒன்றும் செய்ய முடியாத ஆற்றலை மணிநாகத்திற்குத் தந்தார். வரபலத்தின் தைரியத்தால் கருடனைக் கண்டு அஞ்சாமல் மணிநாகம் சுற்றித் திரிந்தான். அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த கருடன், அவனைத் துக்கிக்கொண்டு சென்று தன் வீட்டில் சிறை வைத்தான். பல நாட்கள் மணிநாகனைக் காணாமையால் நந்திதேவன் சிவனிடம் சென்று முறை யிட்டான். சிவன், “நீ மகாவிஷ்ணுவிடம் சென்று மணிநாகனை விடுதலை செய்து கொண்டுவா!” என்று ஆணையிட்டார். நந்திதேவன் மகாவிஷ்ணுவிடம் சென்று தன் வேண்டு கோளைச் சொன்னான். விஷ்ணு கருடனை அழைத்து மணி நாகனை விட்டுவிடு என்று கூறினார். அதனைச் செய்ய விரும்பாத கருடன், 'ஐயனே! சிவன் முதலானவர்களெல்லாம் தமக்கு உதவி செய்பவர்களுக்கும், வாகனங்களுக்கும்