பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வராக புராணம் 511 ஈடுபட்டார். ஒருநாள், மெலிந்த தேகமுடைய பிராமணன், பார்வதிதேவியின் ஆசிரமத்திற்கு தானம் கேட்டு வந்தார். பார்வதியும் சிறிது உணவினைக் கொண்டுவந்து, அந்த பிராமணனுக்குக் கொடுத்தார். உணவினை உண்பதற்கு முன் அந்த பிராமணர், ஆசிரமத்திற்கு அருகில் ஒடும் ஆற்றில் குளித்துவிட்டு வரச் சென்றார். அவர் அங்கு குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு முதலை அவர் காலைப் பற்றிக் கொண்டது. பிராமணர் பெருங்குரலெடுத்து மற்றவர்களை உதவிக்கு அழைத்தார். பார்வதிக்கு என்ன செய்வதென்று குழப்பம் ஏற்பட்டது. அந்த பிராமணனுக்கு உடனே உதவி செய்தாக வேண்டும். ஆனால் அவர் தன் கணவருமல்லர் உறவினரல்லர்: அப்படிப்பட்ட ஒருவரைத் தொட்டு உதவி செய்தால் அது தவறாகும். அதே சமயத்தில், ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்யாமல் இருப்பது பாவம். ஒருவேளை அந்த பிராமணர் இறந்துவிட்டால், அக்குற்றத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சிந்தித்துப் பார்த்த பார்வதி, உடனே உதவி செய்ய விரைந்தார். அந்த பிராமண னைத் தொட்டவுடன், அந்த உருவம் கலைந்து உண்மையான சிவன் வெளிப்பட்டார். சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. தேவர்கள், முனிவர்கள். அப்ஸ்ரஸ், கந்தர் வர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் திருதியை திதியில் நடைபெற்றதால், ருத்ரனை அந்நாளில் வழிபடுதல் சிறப்பாகும். சதுர்த்தி சுக்கிலபட்சம் நான்காம் நாள் வருவது சதுர்த்தி விரதம். விநாயகருக்காக அனுஷ்டிக்கப்படுவது. இந்நாளில் எள்ளினை உண்ணுவது, மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.