பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/541

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


512 பதினெண் புராணங்கள் தொடக்கத்தில், தகுதியை அடிப்படையாகக் கொண்டே எல்லாக் காரியங்களும் நடந்தன. காலப்போக்கில், நேர்மைக்கு இடம் குறைந்து கொண்டே வர, தேவர்கள் இந்த முட்டுக் கட்டைகளை நீக்கி, நல்ல காரியங்கள் நடைபெற ஒரு தேவனை உருவாக்கும்படி ருத்ரனை வேண்டினர். இதைக் கேட்ட ருத்ரன், விநாயகன் என்ற பெயரில் ஒர் உருவத்தைத் தன் வாயிலிருந்து தோற்றுவித்தார். அத்துடன் தன் மயிர்க்காலில் இருந்து பல்லாயிரக்கணக்கான விநாயகர்களைத் தோற்று வித்ததால், இவர்களில் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் யார் என்று தெரியாமல் தேவர்கள் குழம்பினர். பிரம்மன் தலை யிட்டு, ருத்ரனின் கோபத்தை அடக்கி, ருத்ரன் வாயிலிருந்து வெளிப்பட்ட விநாயகனே முதன்மையானவர் என்றும், மற்றவர்கள் அவருக்குத் தோழர்களாக இருப்பர் என்றும் கூறி கணங்களுக்குப் பதியாக இருப்பதால், தலைமைப் பொறுப் பேற்கும் விநாயகனுக்குக் கணபதி என்ற பெயர் கொடுத்தார். சதுர்த்தி அன்று கணேசர் பிறந்ததால் சதுர்த்தி சிறப்பு வாய்ந்த நாளாகும். (விநாயகர் பிறப்புப் பற்றி மற்ற புராணங்கள் வெவ்வேறு விதமாகப் பேசுகின்றன என்பதை அறியவும், பஞ்சமி சுக்கிலபட்சம் ஐந்தாவது நாள் வருவது பஞ்சமி, இந்நாளில் புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பாம்பு களுக்குப் பால் ஊற்றி வணங்க வேண்டும். பஞ்சமி அன்று தான் பிரம்மா, எல்லா நாகங்களையும் அழைத்து, அவற்றை பாதாள லோகத்திற்குச் செல்லுமாறு கூறினார். மிகுதியான விஷத்தினை உடைய அனந்தா, வாசுகி, பத்மா, மகாபத்மா, குளிகா போன்ற பாம்புகளை பிரம்மனே படைத்தார். இந்தப் பாம்புகள், பிரம்மனின் படைப்புகளைப்