பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 பதினெண் புராணங்கள் தேவர்கள் சூரியனிடம் அவனது ஒளியினைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் உலகம் அழிவினின்று காப்பாற்றப்படும் என்றும் கூறினர். சூரியனும் அதை ஒப்புக் கொண்டான். அஷ்டமி சக்கில பட்சம் எட்டாவது நாள் அஷ்டமி எனப்படும். காசிய முனிவருக்கும், திதிக்கும் பிறந்த மகனே அந்தகன் என்ற பெயர் பெற்றான். இவனுக்கு ஆயிரம் கைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கண்கள் இருந்தன. அந்தகர்' என்றால் பார்வை இழந்தவன் என்று பொருள். ஆனால் அந்தகனுக்குப் பார்வை இருந்தது. அவன் ஆயிரம் கைகளும் கால்களும் பெற்றிருந்தமையால் அவன் நடை, குருடனைப் போல் தள்ளாடி நடக்க வேண்டி இருந்தமையால் அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் வந்தது. யாராலும் தனக்குச் சாவு ஏற்படக் கூடாது, தன் தலை கீழே விழக்கூடாது என்று பிரம்மனிடம் வரம் வாங்கியபின் தேவர்களுக்குக் கொடுமை விளைவிக்கத் தொடங்கினான். தேவர்கள் பிரம்மனிடம் வேண்ட நானே கொடுத்த வரத்தை என்னால் மீட்க முடியாது. ஆகவே நாம் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுவோம் என்று கூறிய பிரம்மன் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றார். இதை அறிந்த அந்தகன் பெருஞ்சேனையுடன் வந்து சிவலோகத்தை எதிர்க்கத் தொடங்கினான். அவன் எண்ணம் சிவனைக் கொன்று பார்வதியைத் திருமணம் செய்து கொள்வதாகும். பெரும் போர் நிகழ்ந்தது. சிவனுடைய சூலம் அவனுடைய மார்பைப் பிளக்க அதிலிருந்து ஒழுகிய ரத்தம் பூமியில் விழுந்ததும் புதிய புதிய அந்தகாசுரர்களை உண்டாக் கிற்று. இதை அறிந்த சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து தோன்றிய மாத்ரி என்ற தேவதை பெரு நெருப்பை