பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 517 உண்டாக்கி அவன் ரத்தம் கீழே விழாமல் செய்துவிட்டது. இந்த நிலையில் விஷ்ணுவின் சக்கரம் அந்தகாசுரன் கழுத்தை அறுக்க, அவன் தலை கீழே விழக்கூடாது என்ற பிரம்மனின் வரத்தைக் காக்க சிவன் அந்தத் தலையை சூலத்தில் குத்தி ஆகாயத்தில் தூக்கி விட்டார். இந்த முறையில் அந்தகாசுரன் அழிந்தான். அந்தகன் அழிவு அஷ்டமி திதியில் நடைபெற்றதால் அந்தக் குறிப்பிட்ட திதியில் மாத்ரிகாவை வணங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நவமி சுக்கிலபட்சம் நவமி என்று சொல்லப்படுவது ஒன்பதாவது நாள். காயத்ரி தேவியினால் சொல்லப்பட்ட வேத்ராசுரனின் கதை நடந்தது நவமி அன்றே. (வேத்ராசர என்ற பெயர் எந்தப் புராணத்திலும் குறிப்பிடப் பெறவில்லை. ஆகவே இது வராக புராணத்தின் கற்பனை என்று நினைக்க வேண்டியுள்ளது, முன்னொரு காலத்தில் வேத்ராசுரன் தந்தை இந்திரனால் கொல்லப்பட்டார். தனது அடுத்த பிறவியில் வேத்ராசுரன் தந்தைக்கு முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வந்தன. இதனால் கடுமையான விரதம் மேற்கொண்டு, இந்திரனைக் கொல்வதற்காக ஒரு மகனைப் பெறமுடியும் என்று நினைத் தான். வேத்ரவதி நதி தேவதையை மணந்து, வேத்ராசுரனைப் பெற்றான். இந்த வேத்ராசுரன் தேவர்களுக்கு எதிரியாகத் திகழ்ந்தான். தேவர்கள் சிவனின் உதவியை நாடிச் சென்றனர். வேத்ராசுரனை அழிக்க முடியாது என்று உணர்ந்த சிவபிரான், தேவர்களிடம், பிரம்மனைச் சென்று பார்க்கும்படி கூறினார். தேவர்கள் பிரம்மனைக் காணச் சென்ற பொழுது கங்கைக் கரையில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லியவாறு அமர்ந்