பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/547

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


548 பதினெண் புராணங்கள் திருந்தார் பிரம்மன். அவர் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி ஒன்றும் அறியாமல், சிவன் மீதோ, மற்ற தேவர்கள் மீதோ எந்தக் கவனமும் செலுத்தாமல் இருந்தார். அப்பொழுது திடீரென்று காயத்ரி தேவி தோன்றினாள். அவருக்கு எட்டு கைகளும், அக்கைகளில் எல்லாவிதமான ஆயுதங்களும் இருந்தன. இத்தேவி அசுரர்களுடன் ஒராயிரம் தேவ வருடங்கள் போர் செய்து, முடிவில் வேத்ராசுரனைக் கொன்றாள். பிரம்மனின் தவம் முடிவடைந்து, இமயமலையில் காயத்ரி தேவி வந்து தங்குவதற்கு ஒரு தகுந்த இடத்தை நிர்மாணித்தார். வேத்ராசுரன், காயத்ரி தேவியினால் கொல்லப்பட்டது நவமி திதி ஆகையால், அன்று காயத்ரி தேவியை வணங்குவது சாலச் சிறந்தது. தசமி சுக்கிலபட்சம் பத்தாம் நாள் வருவது தசமி திதியாகும். பிரம்மனால் படைக்கப்பட்ட பத்து தேவதைகளை வணங்க வேண்டும். இந்நாளில் வெறும் தயிர் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசி படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த பிரம்மனுடைய வாயிலிருந்து ஒரு புழுதிக் காற்று புயல்போல் வெளியில் வந்தது. வந்தவுடன் அந்தப் புழுதி குபேரனுடைய வடிவைப் பெற்றது. இவ்வாறு குபேரன் பிறந்தது சுக்கிலபட்ச ஏகாதசி ஆகும். பிரம்மனின் உத்தரவுப் படி தேவர்களின் கஜானா அதிகாரியாகக் குபேரன் நியமிக்கப்பட்டான். குபேரனை நினைத்துச் செய்யும் இவ் விரதம் இந்த ஏகாதசி அன்று பொங்கலை உண்டு அனுஷ்டிக்க வேண்டும். -