பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 519 துவாதசி சுக்கிலபட்சம் பன்னிரண்டாம் நாள் அனுஷ்டிப்பது துவாதசி திதி. வாயுதேவன் வேண்டிக் கொண்டதால், நாராயணன் விஷ்ணுவாக அவதரித்தார். லட்சுமி தேவி விஷ்ணுவை மணந்து கொண்டது துவாதசி அன்றுதான். இவர்கள் இருவரையும் துவாதசி அன்று வழிபடுவது நல்லது. திரயோதசி சுக்கிலபட்சம் பதின்மூன்றாம் நாள் திரயோதசி எனப்படும். பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தி பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு வலப்பக்கமிருந்து தோன்றினவன் தர்மதேவன். அவனுக்கு நான்கு கால்களும், மூன்று கொம்புகளும் இருந்தன. எருது வடிவில் தோன்றி யிருந்தான். மக்கள் நல்வழியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே தர்மதேவனின் கடமையாகும். மக்கள் தவறான பாதையில் சென்றால், தர்ம தேவதையின் ஒரு கால் இல்லாமல் போகும். அதாவது சத்ய த்தில் தர்ம ே க்கு நான்கு கால் ம், திரேதா யுகத்தில் மூன்று கால்களும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களும், கலியுகத்தில் ஒரு காலும் இருக்கும். ஒரு சமயம் பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாராவை, சந்திரன் கவர்ந்து சென்றான். இதைக் கேள்வியுற்ற தர்மதேவன் மிகவும் மனம் வருந்தி காட்டில் சென்று தவம் புரியலானான். தர்மத்தின் தலைவனான தர்மதேவன் இல்லாமையால், எங்கும் சட்டம் சீர்கெட்டு, கொடுரமான நிகழ்ச்சிகளே நடைபெற்றன. இதைக் கண்ட பிரம்மன், திரயோதசி திதி என்ற தர்மதேவனைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். ஆதலால் இத்திதி மிகச் சிறப்புப் பெற்றதாகும். சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் ருத்திரனைப் பற்றி நினைப்பவர்கள் விரதம் அனுஷ்டிப்ப வர்கள், எல்லாப் பாவங்களினின்றும் விடுதலை பெறுவர்.