பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 பதினெண் புராணங்கள் அமாவாசை பிரம்மனிடத்து தோன்றியவர்களாகிய தன்மாத்திரர்கள் என்பவர்கள் ஆகாயத்திலே தங்கி சோமபானத்தை உணவாகக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களே மக்கள் அனைவருக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைத் திருப்திப்படுத்த அமாவாசை அன்றைக்கு எள், தண்ணிர், தர்ப்பை என்பவற்றைப் படைத்து வழிபடுவதால் இவர்கள் திருப்தி அடைகிறார்கள். இதற்குத் தர்ப்பணம் என்பது பெயர். பெளனர்மி சோமன் அல்லது சந்திரன் என்று அழைக்கப்படும் தேவன், அத்ரி முனிவரின் மகனாவான். தட்சனின் பெண்களுள் இருபத்தி ஏழு பெண்களை மணந்து கொண்டவன். அவர்களுள் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்திய தால், மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் அறிவுரை கூறியும், சோமன் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை. கடும் கோபம் கொண்ட தட்சன் சாபமிட்டான். ஆகையால் சந்திரன் சிறிது சிறிதாகத் தேய்ந்து பதினைந்தாம் நாள் அமாவாசை அன்று மறைந்து விடுகிறான். மருந்தாகும் மூலிகைச் செடிகள், சந்திரன் மறைந்து விடுவதால் தங்களின் ஆற்றலை இழந்து விட்டன. தேவர்கள் சென்று விஷ்ணுவிடம் முறையிட, அவர் பாற்கடலைக் கடையும்படி கூறினார். (பாற்கடல் கடத்ததைப் பற்றி எல்லாப் புராணங்களும் பேசுகின்றன. சாவா மருந்தாகிய அமிர்தத்தை எடுப்பதற்காகப் பாற்கடல் கடையப்பட்டது என்பது மற்ற புராணங்கள் கூறும் கதையாகும். ஆனால் வராக புர7ணம் மற்றவற்றிலிருந்து ம7றுபடுகிறது பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குச் சோமபாணம் கிடைக்கின்றது. இந்தச் சோமபாணம் சந்திரனே ஆகும். சிவ