பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 பதினெண் புராணங்கள் பிரம்மனிடம் உள்ளன. சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் சிவபெருமானிடம் உள்ளன. ஒரு சமயம் பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தியின் போது சிவபெருமானிடம் இப்பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உடனே சிவபெருமானும் நீரின் அடியில் சென்று தவம் புரியத் துவங்கினார். அப்பொழுது தன் எதிரே கை கட்டைவிரல் அளவு வடிவத்தில் விஷ்ணு சிவன் எதிரே தோன்றினார். அந்த வடிவத்தைச் சிவன் அலட்சியப்படுத்தி விட்டார். அதன் பிறகு ஒளிமயமான பன்னிரண்டு பிம்பங்கள் சிவன் எதிரே வந்தன. நீங்கள் யார்? எனச் சிவன் கேட்க பதிலே சொல்லாமல் அந்த 12 ஒளிகளும் மறைந்தன. அதன் பிறகு விஷ்ணு சிவனுக்கு நேரே தோன்றி பின்வருமாறு பேசலானார். “நீர் மிக உயர்ந்தவர் என்றும், அனைவரினும் மேம்பட்டவர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர். உண்மை அவ்வாறில்லை. உமக்கு எதிரே வந்த பன்னிரண்டு ஒளி வடிவங்களைக் கூட நீர் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் துவாதச ஆதித்தர்கள். அவர்களை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால், எதனையும் காணவேண்டுமானால் என் அருள் இருந்தால்தான் முடியும். இதோ உமது எதிரில் கட்டைவிரல் வடிவளவு உருவெடுக்கிறேன் பாரும்” என்று கூறிவிட்டுக் கட்டைவிரல் வடிவில் தோன்றிய விஷ்ணு, உயர வளர ஆரம்பித்து அண்டத்தை முட்டும் அளவில் வளரத் தொடங்கினான். அதைப் பார்த்த சிவன் விஷ்ணுவின் உண்மையான பெருமை அறிந்து கொண்டு தவம் செய்யப் புறப்பட்டார். தவம் பிருத்வி, வராகத்தைப் பார்த்து ஒருவருடைய பாவங் களைப் போக்கிக் கொள்ளச் சிறந்த வழி யாது? என்று கேட்டது. அதற்கு வராகம் சொன்ன விடை வருமாறு: